ராம் பவன். இவரது மனைவி துர்​காவ​தி.

 
இந்தியா

10 ஆண்டுகளாக சிறுவர்களை சீரழித்து 2 லட்சம் ஆபாச வீடியோக்களை விற்ற உ.பி. தம்பதிக்கு மரண தண்டனை

செய்திப்பிரிவு

பண்டா: உத்தர பிரதேச மாநிலத்​தின் நீர்​வளத் துறை​யில் இளநிலை பொறி​யாள​ராகப் பணி​யாற்​றிய​வர் ராம் பவன். இவரது மனைவி துர்​காவ​தி. இரு​வரும் பண்டா மற்​றும் சித்​ரகூடம் பகு​தி​யில் கடந்த 2010-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை​யில் சிறிய அறையை வாடகைக்கு எடுத்து தங்கி வந்​துள்​ளனர்.

அந்த 10 ஆண்​டு​களில் சிறு​வர்​களை தங்​கள் வீட்​டுக்கு அழைத்து வீடியோ கேம் விளை​யாட வைப்​பது, அவர்​களுக்கு சாக்​லேட்​டு​கள் வழங்​கு​வது, பரிசு வழங்​கு​வது என பழக்​கப்​படுத்தி உள்​ளனர்.

          

பின்​னர் சிறு​வர்​களை ஆபாச படம் எடுத்​துள்​ளனர். இது​போல் 33 சிறு​வர்​களை ராம்​பவன் மற்​றும் துர்​காவதி இரு​வரும் ஆபாச படம் எடுத்து 40-க்​கும் மேற்​பட்ட நாடு​களுக்கு விற்​பனை செய்து வந்​துள்​ளனர். ஒரு கட்​டத்​தில் இவர்​களு​டைய சட்​ட​விரோத செயல்​கள் வெளி​யில் தெரிய வந்​தது.

போலீ​ஸார் உடனடி​யாக களத்​தில் இறங்கி விசா​ரணை நடத்​தினர். அப்​போது, அவர்​கள் 2 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட ஆபாச வீடியோக்​கள் எடுத்​ததும், அதில் பாதிக்​கப்​பட்ட சிறு​வர்​கள் 18 வயதுக்கு குறை​வானவர்​கள் என்​பதும் சிலர் 3 வயதுக்​குட்​பட்​ட​வர்​கள் என்​பதும் தெரிய வந்​தது.

இதுதொடர்​பாக அவர்​கள் மீது போக்சோ சட்​டத்​தின் கீழ் வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டது. சிபிஐ அதி​காரி​களும் தீவிர விசா​ரணை நடத்தி வந்​தனர். இந்த வழக்கு சிறப்பு நீதி​மன்​றத்​தில் நடை​பெற்று வந்​தது.

அப்​போது ராம் பவன் வீட்​டில் சோதனை நடத்​திய போது கைப்​பற்​றப்​பட்ட வீடியோக்​கள், ஆதா​ரங்​கள், ரொக்​கப்​பணம் போன்​றவற்றை விசா​ரணை குழு​வினர் நீதி​மன்​றத்​தில் சமர்ப்​பித்​தனர். இந்த வழக்​கில் பண்டா மாவட்ட சிறப்பு நீதி​மன்​றம் கடந்த வெள்​ளிக்​கிழமை 163 பக்​கத்​தில் தீர்ப்​பளித்​தது.

இந்த வழக்கு அரி​தி​லும் அரி​தானது என்று மாவட்ட கூடு​தல் செஷன்ஸ் நீதி​மன்ற நீதிபதி பிரதீப் குமார் மிஸ்ரா தெரி​வித்​தார். ராம் பவன் மற்​றும் அவரது மனைவி துர்​காவ​திக்கு போக்சோ சட்​டத்​தின் பல்​வேறு பிரிவு​களின் கீழ் மரண தண்​டனை விதித்து தீர்ப்​பளித்​தார். அத்​துடன் பாதிக்​கப்​பட்ட 33 சிறு​வர்​களுக்​கும் உ.பி. அரசு தலா ரூ.10 லட்​சம் நஷ்டஈடு வழங்க வேண்​டும்.

அத்​துடன் ராம்​பவன் வீட்​டில் பறி​முதல் செய்​யப்​பட்ட ரொக்​கப் பணத்​தை​யும் பாதிக்​கப்​பட்ட சிறு​வர்​களுக்கு சரி சமமாகப் பகிர்ந்​தளிக்க வேண்​டும் என்று நீதிபதி மிஸ்ரா உத்​தர​விட்​டார்.

வழக்கு விசா​ரணை​யின் போது இந்த தம்​பதி எப்​படி செயல்​பட்​டனர் என்​பதை நீதி​மன்​றத்​தில் சிபிஐ அதி​காரி​கள் ஆதா​ரங்​களுடன் விளக்​கினர். மொபைல் போன், கைக் கடி​காரம் வாங்கித் தரு​வ​தாக ஆசை காட்டி சிறு​வர்​களை வளைத்​துள்​ளனர். பின்​னர் அவர்​களை ஆபாச படம் எடுத்து மிரட்டி மீண்​டும் மீண்​டும் வரவழைத்​துள்​ளனர்.

டார்க் வெப் மூலம் ஆபாச வீடியோக்​கள் விற்​பனை​யா​வது குறித்து இன்​டர்​போல் இந்​திய அதி​காரி​களுக்கு தகவல் கொடுத்​துள்​ளது. இதையடுத்​து, ராம் பவன் மற்​றும் துர்​காதேவி சிக்​கினர்” என்று சிபிஐ அதி​காரி​கள் தெரி​வித்​தனர். பா​திக்​கப்​பட்ட சிறு​வர்​களில் சிலர் இன்​னும் மருத்​து​வ​மனை​களில் சிகிச்சை பெற்​று வரு​கின்​றனர்​.

SCROLL FOR NEXT