இந்தியா

உ.பி.யில் தொழிலதிபரின் மகன் ஓட்டிய அதிவேக சொகுசு கார் மோதி 6 பேர் காயம்

செய்திப்பிரிவு

கான்பூர்: உ.பி.​யைச் சேர்ந்த பிரபல புகை​யிலை வணி​கர் கே.கே.மிஸ்​ரா​வின் மகன் ஷிவம் மிஸ்​ரா. இவர் நேற்று முன்​தினம் கான்​பூரில் உள்ள விஐபி சாலை​யில் தனது லம்​போர்​கினி ரெவுல்டோ சொகுசு காரில் அதிவேக​மாக வந்​துள்​ளார்.

அப்​போது கார் கட்​டுப்​பாட்டை இழந்து சாலை​யோரம் நின்​றிருந்த மக்​கள் மற்​றும் வாக​னங்​கள் மீது மோதி​யது. முதலில் அந்த கார், ஒரு ஆட்டோ மீது மோதி, பிறகு ஒரு பைக் மீது மோதி​யுள்​ளது. மேலும் மோட்​டார் பைக்கை சிறிது தூரம் இழுத்​துச் சென்று ஒரு மின் கம்​பம் மீது மோதி நின்​றது. இதில் மோட்​டார் பைக்​கில் வந்த தவுபிக் என்​பவர் 10 அடி உயரத்​துக்கு தூக்கி வீசப்​பட்​டு, பலத்த காயம் அடைந்​தார். மேலும் 5 பேருக்கு எலும்பு முறி​வும் சிராய்ப்​பு​களும் ஏற்​பட்​டுள்​ள​தாக போலீ​ஸார் தெரி​வித்​தனர்.

          

ஷிவம், மது​போதை​யில் இந்த விபத்தை ஏற்​படுத்​தி​ய​தாக​வும் விபத்​துக்கு பிறகு அவர் காரில் தப்ப முயன்​ற​தாக​வும் கூறப்படுகிறது. இதனால் ஆத்​திரமடைந்த மக்​கள் கார் கண்ணாடியை உடைத்து ஷிவத்தை வெளியே இழுத்து தாக்க முயன்​றனர். இதை பின்​னால் மற்​றொரு காரில் வந்த ஷிவத்​தின் பவுன்​சர்​கள் தடுக்க முயன்​றனர். இறு​தி​யில் போலீ​ஸார் வந்து ஷிவத்தை மீட்டு அவரை​யும் விபத்​தில் காயம் அடைந்தவர்களையும் மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர்.

மேலும் காரை பறி​முதல் செய்​தனர். வடமேற்கு டெல்​லி​யின் ரோகிணி​யில் பதிவு செய்​யப்​பட்ட இந்த காரின் விலை ரூ.10 கோடி. ஷிவத்​தின் தந்தை கே.கே.மிஸ்​ராவின் அலு​வல​கம் மற்​றும் வீட்​டில் வரு​மான வரித்​துறை சோதனை கடந்த 2021 பிப்​ர​வரி​யில் நடை​பெற்​றது. இந்த சோதனை​யில் கே.கே.மிஸ்ரா ரூ.100 கோடி வரி ஏய்ப்​பு செய்​தது​ கண்​டு​பிடிக்​கப்​பட்​டது.

SCROLL FOR NEXT