இந்தியா

ஹைட்ரஜன் வாகன சோதனை: அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாட்டின் முக்கிய 10 தேசிய நெடுஞ்சாலை வழித்தடங்களில் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் வாகனங்களுக்கான முன்னோடித் திட்ட சோதனைகளை மத்திய அரசு ஏற்கனவே தொடங்கி தீவிரமாக செயல்படுத்தி வருவதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

இந்தியப் போக்குவரத்துத் துறையின் எதிர்காலத்sதை மாற்றியமைக்கும் சக்தியாக ‘ஹைட்ரஜன்’ எரிபொருள் விளங்கும். சுற்றுச்சூழல் மாசைக் குறைக்கவும், கச்சா எண்ணெய் இறக்குமதியைக் கட்டுப்படுத்தி நாட்டின் ஆற்றல் பாதுகாப்பை பலப்படுத்தவும் மத்திய அரசு மாற்று எரிபொருள் பயன்பாட்டைத் தீவிரமாக ஊக்குவித்து வருகிறது.

அதன்படி, மத்திய அரசு தற்போது ஹைட்ரஜன் வாகனச் சோதனைகளை கிரேட்டர் நொய்டா - டெல்லி - ஆக்ரா உட்பட 10 வழித் தடங்களில் செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு நிதின் கட்கரி தெரிவித்தார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT