மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்

 
இந்தியா

‘ஜிஎம்டி வேண்டாம்’ - நேர கணக்கீட்டு முறையில் மாற்றம் கோரும் தர்மேந்திர பிரதான்

வேட்டையன்

உஜ்ஜைன்: நேர கணக்கீட்டு முறையில் ஜிஎம்டி(GMT)-க்கு மாற்றாக தொன்மையான இந்திய வழக்கத்தின்படி எம்எஸ்டி (MST) முறையை கடைபிடிக்கலாம் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனுக்கு வந்திருந்த அவர் கூறியதாவது: பூமத்திய ரேகையும், கடகரேகையும் சந்திக்கும் இடமாக உஜ்ஜைன் உள்ளது. இங்கு பண்டைய கால முறையில் நேரம் கணக்கிடப்பட்டுள்ளது.

          

அந்த வகையில் காலனி ஆதிக்கத்தில் அறிமுகமான ஜிஎம்டி-க்கு மாற்றாக எம்எஸ்டி (மகாகால் ஸ்டான்டர்ட் டைம்) முறையை பின்பற்றலாம். இது குறித்து அறிவியல் சமூகத்தினர் மற்றும் வல்லுநர்கள் ஆலோசிக்க வேண்டும். அறிவியல் பூர்வமாக இதை நிரூபித்து எம்ஸ்டி நேரமுறைக்கு நாம் மாறலாம் என அவர் தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் யோசனையை மத்திய பிரதேச மாநில முதல்வர் மோகன் யாதவ் வரவேற்றுள்ளார். பண்டைய இந்தியர்களின் நேர கணக்கு முறை சூரியன் மற்றும் கோள்களின் இயக்கம் சார்ந்து இருந்தது என மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.

இந்தச் சூழலில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் கருத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் சமூக வலைதள பயன்பாட்டாளர்கள் எதிர்வினையாற்றி வருகின்றனர்.

SCROLL FOR NEXT