மத்திய அமைச்சர் அமித் ஷா

 
இந்தியா

‘இந்திய மரபுகளில் தீர்வு’ - அமைச்சர் அமித் ஷா பெருமிதம்

செய்திப்பிரிவு

ஹரித்துவார்: உத்தராகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் ‘அகில உலக காயத்ரி பரிவார்’ அமைப்பின் நூற்றாண்டு விழாவில் மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்று பேசியதாவது:

சனாதன தர்மத்தை அறிந்தவர்கள், இந்திய கலாச்சாரத்தை புரிந்துகொண்டவர்கள், இந்திய வரலாற்றை அறிந்தவர்கள், உலகின் பிரச்சினைகளுக்கு எங்காவது ஒரு தீர்வு இருக்குமானால், அது இந்திய மரபில்தான் இருக்கிறது என்று நம்புகிறார்கள்.

          

இந்தியாவின் ஆன்மீக மறுகட்டமைப்பு இந்தியாவுக்கு மட்டுமல்ல, முழு உலகத்துக்கும் நன்மை பயக்கும். சுவாமி விவேகானந்தர், மகரிஷி அரவிந்தர், காயத்ரி பரிவார் நிறுவனர் பண்டிட் ராம் சர்மா ஆகிய மாபெரும் சிந்தனையாளர்கள், இந்தியா தனது முழுப் பெருமையுடன் விழித்தெழும்போது, அது முழு உலகையும் முழுப் பிரபஞ்சத்தையும் ஒளிரச் செய்யும் என்ற தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தினர்.

உலகப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் இந்திய மரபுகளில் வேரூன்றியுள்ளன. இவ்வாறு அமித் ஷா கூறினார்.

SCROLL FOR NEXT