காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே

 
இந்தியா

“நாட்​டின் முக்​கி​யத் தொழில்களை சீனா கைப்பற்ற மத்​திய அரசு உதவி” - கார்கே குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாட்​டின் முக்​கி​யத் தொழில்​களை​ சீனா கைப்பற்றுவதற்கு மத்​திய அரசு உதவி செய்​கிறது என்று காங்கிரஸ் கட்சியின் தேசி​யத் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து எக்ஸ் தளத்​தில் கார்கே நேற்று கூறியதாவது: நமது நாட்​டின் முக்​கி​யத் தொழில்​துறை​களுக்​கு தேவை​யான பொருட்கள் சீனா​வில் இருந்​து​தான் அதிக அளவில் இறக்​குமதி செய்​யப்​படு​கின்​றன. இதனால் அங்​குள்ள தொழிற்சாலைகளுக்கும், தொழில​திபர்​களுக்​கும் நல்ல வாய்ப்பும், அதிக லாப​மும் கிடைக்​கிறது. நமது நாட்​டிலுள்ள முக்கிய தொழில்​துறை​களை சீனா கைப்​பற்​று​வதற்கு மோடி அரசு உதவி புரி​கிறது.

2020ம் ஆண்​டில் நடந்த கல்​வான் தாக்​குதல் சம்​பவத்​துக்​குப் பிறகு சீனா​வில் இருந்து இந்​தி​யா​வுக்கு இறக்​குமதி அதி​கரித்து வருகிறது. கடந்த 2025- 26ம் ஆண்​டில் 101.81 சதவீத அளவுக்கு இறக்​குமதி அதி​கரித்​துள்​ளது. 112.1 பில்​லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு சீனா​வில் இருந்து நமது நாட்​டுக்கு இறக்குமதி செய்​யப்​பட்​டுள்​ளது. நோய் எதிர்ப்பு மருந்​துகளான ஆன்​டிப​யாடிக் மருந்​துகள் 86 சதவீதம் சீனா​வில் இருந்​து​தான் இறக்​கும​தி​யாகின்​றன.

அதே​போல் மின்​சார வாக​னங்​களுக்​கான (இ.​வி) கருவி​கள், உதிரிபாகங்​கள் 66 சதவீத அளவுக்கு சீனா​வில் இருந்​து​தான் இறக்குமதி செய்​யப்​படு​கின்​றன. இ.வி.வாக​னங்​களுக்​கான லித்தியம்​-அயன் பேட்​டரி​கள் 75 சதவீத அளவுக்கு இறக்​குமதி செய்​யப்​படு​கின்​றன. நிரந்தர காந்​தங்​கள் கடந்த நிதி​யாண்​டில் 93 சதவீத அளவுக்கு இறக்​கும​தி​யாகி​யுள்​ளன.

இது​போன்ற இந்​தி​யா​வின் முக்​கிய தொழில்​களை​யும், தொழில்துறை​களை​யும் கட்​டுப்​படுத்​தும் அளவுக்கு சீனா​வின் இறக்​குமதி உள்​ளது. இதற்கு மோடி தலை​மையி​லான மத்​திய அரசே காரணம். இவ்​வாறு கார்​கே கூறி​யுள்​ளார்​.

SCROLL FOR NEXT