இந்தியா

இந்தியா வரும் வெளிநாட்டு தலைவர்களை சந்திக்கவிடாமல் தடுக்கிறது மத்திய அரசு: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை, நான் சந்​தித்து பேசுவதை மத்​திய அரசு விரும்​ப​வில்லை என்று ராகுல் காந்தி குற்​றம் சாட்டி உள்​ளார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று டெல்லி வந்​தார். இதுதொடர்​பாக மக்​களவை எதிர்க்​கட்சி தலை​வர் ராகுல் காந்தி நேற்று நிருபர்​களிடம் கூறிய​தாவது: வெளி​நாட்டு தலை​வர்​கள் இந்​தி​யா​வுக்கு வருகை தரும்​போது எதிர்க்​கட்சி தலை​வரை சந்​தித்​துப் பேசுவது மரபு ஆகும். முன்​னாள் பிரதமர்​கள் வாஜ்​பாய், மன்​மோகன் சிங் ஆட்​சிக் காலத்​தில் இந்த மரபு கண்​டிப்​புடன் பின்​பற்​றப்​பட்​டது.

ஆனால் பிரதமர் நரேந்​திர மோடி தலை​மையி​லான தற்​போதைய மத்​திய அரசு மரபை மாற்றி உள்​ளது. தற்​போது வெளி​நாட்டு தலை​வர்​கள் இந்​தி​யா​வுக்கு வரும்​போது எதிர்க்​கட்சி தலை​வரை சந்​திக்​காமல் செல்​கின்​றனர். நான் வெளி​நாடு செல்​லும்​போது​ கூட, அந்த நாடு​களின் தலை​வர்​கள் என்னை சந்​திக்க வேண்​டாம் என்று மத்​திய அரசு தரப்​பில் அறி​வுறுத்​தப்​படு​கிறது.

தற்​போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை, நான் சந்​தித்து பேசுவதை மத்​திய அரசு விரும்​ப​வில்​லை. இது மத்​திய வெளி​யுறவுத் துறையின் எதிர்மறை சிந்​தனையை வெளிப்​படுத்​துகிறது.

ஆளும் கட்​சிக்​கும் எதிர்க்​கட்​சிக்​கும் இடையே கருத்து வேறு​பாடு​கள் இருக்​கலாம். ஆனால் எதிர்க்​கட்சி தலை​வரும் இந்​தி​யா​வின் பிர​தி​நிதி என்​பதை மத்​திய அரசு மறந்​து​விடக்​கூ​டாது. இவ்​வாறு ராகுல் காந்தி தெரி​வித்​தார்.

இதே விவ​காரம் குறித்து காங்​கிரஸ் பொதுச்​செய​லா​ளர் பிரி​யங்கா காந்தி கூறும்​போது, “வெளி​நாடு​களின் தலை​வர்​கள், இந்​தி​யா​வுக்கு வருகை தரும்​போது மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வரை சந்​திப்​பது மரபு ஆகும். இந்த மரபை மத்​திய அரசு உடைத்​திருக்​கிறது. ஜனநாயக மரபு​களை காக்க வேண்​டியது மத்​திய அரசின்​ கடமை ஆகும்​" என்​று தெரி​வித்​தார்​.

SCROLL FOR NEXT