இந்தியா

திருப்பதியில் திருமண கோஷ்டி தவறவிட்ட நகை, பணத்தை ஒப்படைத்த அடையாளம் தெரியாத நபர்

என்.மகேஷ்குமார்

திருமலை: ஆந்​திர மாநிலம், குண்​டூர் மாவட்​டம், பிட்​ரபேட்டா பகு​தி​யைச் சேர்ந்த நாராயணா-சுனிதா தம்​ப​தி, தங்​கள் மகளின் திரு​மணத்தை திரு​மலை​யில் நடத்த முடிவு செய்​தனர். அதன்​படி, மணமகள் மற்​றும் மணமகன் வீட்​டைச் சேர்ந்த முக்​கிய​மானவர்​கள் ரயி​லில் திருப்​ப​திக்கு வந்​தனர்.

பின்​னர், அங்​கிருந்து 2 ஜீப்​களில் திரு​மலைக்​குச் சென்​றனர். திருப்​பதி அலிபிரி வாகன சோதனைச் சாவடி​யில் இரு வாக​னங்​களும், அதில் உள்​ளவர்​களும் அவர்​களின் உடமை​களும் சோதிக்​கப்​பட்டு அனுப்பி வைக்​கப்​பட்​டது.

அப்​போது, மணமகளுக்கு போட​விருந்த ரூ.8 லட்​சம் மதிப்​புள்ள 61 கிராம் தங்க நகைகள் மற்​றும் ரூ.2,02,840 ரொக்​கம் மற்​றும் ரூ.10 லட்​சம் மதிப்​புள்ள சொத்​துப்​பத்​திரம் ஆகியவை வைத்​திருந்த பை காணா​மல் போனது. இதனை அறி​யாமலேயே அவர்​கள் திரு​மலைக்கு சென்​றுள்​ளனர்.

சிறிது நேரத்​திலேயே, திரு​மலைக்கு பைக்​கில் ஹெல்​மெட் அணிந்து சென்ற ஒரு​வர், அலிபிரி சோதனைச் சாவடி​யில் இருந்த திரு​மலை திருப்​பதி தேவஸ்​தான பாது​காவலர் ரெட்​டப்ப ராவ் என்​பவரிடம், “இந்த பை, சாலை​யில் கிடந்​தது. இதனை உரிய​வர்​களிடம் சேர்த்து விடுங்​கள்” எனக் கூறி​விட்​டு, அங்​கிருந்து சென்று விட்​டார். பாது​காவலர் ரெட்​டப்ப ராவ், அந்​தப் பையை, தனது மேல​தி​காரி​களிடம் ஒப்​படைத்​தார்.

இதனிடையே, திரு​மலை சென்​றடைந்த திருமண கோஷ்டி​யினர், நகை, பணம், சொத்து பத்​திரம் இருந்த பை காணா​மல் போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்​தனர். அவர்​களுக்​குள் வாக்​கு​வாதம் ஏற்​பட்​டு, திரு​மணமே நின்று போகும் அளவிற்கு பிரச்​சினை ஏற்​பட்​டது.

பின்​னர், திரு​மலை​யில் உள்ள போலீஸ் கட்​டுப்​பாட்டு அறை​யில் புகார் அளித்​தனர். அதை அறிந்த அலிபிரி சோதனைச் சாவடி அதி​காரி​கள் அந்​தப் பை தங்​களிடம் இருப்​பதை போலீ​ஸாருக்கு தெரியப்​படுத்​தினர். பின்​னர், திருமண கோஷ்டி​யினர் அலிபிரி சோதனைச் சாவடிக்​குச் சென்று அந்​தப் பையை வாங்​கினர். இதனால் நின்று போக இருந்த திரு​மணம் மீண்​டும் நல்​லபடி​யாக நடந்​தது.

SCROLL FOR NEXT