இந்தியா

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி டெல்லி வருகிறார்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: கடந்த 2022-ம் ஆண்டு பிப்​ர​வரி முதல் ரஷ்​யா, உக்​ரைன் இடையே போர் நடை​பெற்று வரு​கிறது. இந்த போருக்கு முற்​றுப் புள்ளி வைக்க வேண்​டும் என்று பிரதமர் நரேந்​திர மோடி தொடர்ந்து வலி​யுறுத்தி வரு​கிறார்.

ரஷ்ய அதிபர் புதின் இந்​தி​யா​ வந்தபோது உக்ரைன் போர் நிறுத்தம் குறித்தும் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

இந்நிலையில், உக்​ரைன் அதிபர் ஜெலன்​ஸ்கி வரும் ஜனவரி​யில் டெல்லி வரு​கிறார். அவரது பயண தேதியை உறுதி செய்ய இந்​திய, உக்​ரைன் வெளி​யுறவுத் துறை அதி​காரி​கள் கடந்த சில வாரங்​களாக பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கின்​றனர்.

SCROLL FOR NEXT