இந்தியா

கோயில் நிதியைத் திருடி கட்சி உடைக்கும் பாஜக: உத்தவ் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று செய்​தி​யாளர் சந்​திப்​பில் பேசி​ய​தாவது:

எம்​பிக்​களும், எம்எல்ஏக்​களை விலைக்கு வாங்​கி, கட்​சிகளை உடைக்​க ‘ஆபரேஷன்' என்கின்றனர். பாஜக தற்​போது நடத்​து​வது ‘ஆபரேஷன் ராம் மந்​திர்' தானா? ராமர் கோயி​லில் நிதித் திருட்டு நடந்​துள்​ளதற்​கான ஆதா​ரங்​கள் உள்​ளன. அங்​கிருந்து திருடப்​பட்ட பணம் தான் அரசி​யல் கட்​சிகளை உடைக்​கப் பயன்​படுத்​தப்​படு​வ​தாக மக்​கள் பேசிக் கொள்​கிறார்​கள்.

கோ​யில்​களில் கொள்​ளை​யடிப்​பவர்​களை இந்​துக்​கள் இனி ஒரு​போதும் மன்​னிக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT