ஆயுர்வேத மசாஜ் மையத்தில் தாதா கும்பல் தாக்குதல் நடத்திய காட்சி.

 
இந்தியா

கேரளாவில் ரூ.50,000 மாமூல் தர மறுத்ததால் மசாஜ் மைய பெண் ஊழியரை பாலியல் வன்கொடுமை செய்த 2 பேர் கைது

செய்திப்பிரிவு

திருவல்லா: கேரளா​வின் திரு​வல்லா பகு​தி​யில் ரூ.50,000 மாமூல் தர மறுத்​த​தால், ஆயுர்​வேத மசாஜ் மைய பெண் ஊழியரை 6 பேர் கும்​பல் பாலியல் வன்​கொடுமை செய்​தது. இதில் இரு​வர் கைது செய்​யப்​பட்​டனர்.

கேரளா​வின் பத்​தனம் ​திட்டா மாவட்​டம் திரு​வல்லா பகு​தி​யில் ஆயுர்​வேத மசாஜ் மையம் நடத்​தும் உரிமை​யாளரிடம் அப்பகுதியைச் சேர்த்த தாதா கும்​பல் கடந்த 1ம் தேதி ரூ.50,000 மாமூல் கேட்​டுள்​ளது. ஆனால், ரூ.10,000 மட்​டும் மசாஜ் மைய உரிமை​யாளர் வழங்​கி​னார். இதனால் ஆத்​திரம் அடைந்த தாதா கும்​பல், ஆயுர்​வேத மசாஜ் மைய ஊழியர் மற்​றும் பெண் வாடிக்கை​யாளர் ஒரு​வரை தாக்​கியது.

          

பின்​னர் வரவேற்பு அறை​யில் இருந்த பெண் ஊழியரை தனியறைக்கு இழுத்து சென்று 6 பேர் கும்​பல் பாலியல் வன்​கொடுமை செய்​துள்​ளது. இதை அந்த கும்​பல் வீடியோ​ எடுத்தும் மிரட்​டி​யுள்​ளது. பட்​டப் ​பகலில் நடை​பெற்ற இச்​சம்​பவம் இப்பகுதி மக்​களிடையே பீதியை ஏற்​படுத்​தியது. பாதிக்​கப்​பட்ட பெண், திருவல்லா காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார்.

இதன் பேரில் சுபின் அலெக்​சாண்​டர் சா்கோ (29), பெர்​லின் தாஸ் (38) ஆகிய இரண்டு முக்​கிய குற்​ற​வாளி​களை போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர். மற்ற 4 பேரை தேடி வரு​கின்​றனர். கைது செய்யப்பட்​ட​வர்​களில் சுபின் அலெக்​சாண்​டர் ஏற்​கெனவே பல குற்​றங்​களில்​ ஈடு​பட்​ட​வர்​ என தெரிந்​தது.

SCROLL FOR NEXT