இந்தியா

ஆந்​தி​ராவில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட இருவர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

கடப்பா: ஆந்​தி​ரா​வின், கடப்​பாவை சேர்ந்த யூ டியூபர் முபாரக். இவர் சமூக வலை​தளத்​தில் பல்​வேறு வீடியோக்​களை பதிவிடுவதை வழக்​க​மாக கொண்​டிருந்​தார்.

இந்த சூழலில் கடப்பா விமான நிலைய சாலை​யில் முபாரக்​கும் அவரது நண்​பர் சையத்​தும் இணைந்து அண்​மை​யில் பைக் சாகசத்​தில் ஈடு​பட்​டனர். அதிக வேகத்​தால் பைக் நிலை தடு​மாறி சாலை​யோர மரத்​தின் மீது மோதி​யது.

இந்த விபத்​தில் பைக்கை ஓட்​டிய சையத் சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தார். படு​கா​யம் அடைந்த முபாரக் பெங்​களூரு மருத்துவமனை​யில் சேர்க்​கப்​பட்​டார். அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயி​ரிழந்​தார்.

          
SCROLL FOR NEXT