பிஜாப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தின் தென்மேற்கு வனப் பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக ரகசியத் தகவல் அதிரடிப் படையினருக்குக் கிடைத்தது.
இதன் அடிப்படையில் மாவட்ட ரிசர்வ் காவல் படை, சிறப்பு அதிரடிப்படை, கோப்ரா படையினர் ஆகியோர் இணைந்து நேற்று முன்தினம் முதல் அப்பகுதியில் நக்சலைட் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
நேற்று காலை வனப் பகுதியில் பதுங்கியிருந்த நக்சல்கள், போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து போலீஸாரும் துப்பாக்கியால் திருப்பிச் சுட்டனர். இந்தத் துப்பாக்கிச் சண்டை நீண்ட நேரம் நீடித்தது. முடிவில், 2 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், அவர்களது உடல் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் போலீஸார் தெரிவித்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஏகே 47 ரகத்தைச் சேர்ந்த துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.