இடிந்து விழுந்த கட்டிடம்

 
இந்தியா

டெல்லியில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் இருவர் உயிரிழப்பு, 4 பேர் காயம்

மோகன் கணபதி

புதுடெல்லி: கிழக்கு டெல்லியின் ஜ்வாலா நகரில் இரண்டு அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 வயது சிறுமி உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். 4 பேர் காயமடைந்துள்ளனர்.

டெல்லியின் சப்ஜி மண்டி பகுதியில் உள்ள பீர் பாபா மஜார் அருகே ஜ்வாலா நகரில் இன்று காலை 10.09 மணி அளவில் இந்த கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. இது குறித்து விவேக் விஹார் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, சம்பவ இடத்துக்கு போலீஸார் விரைந்துள்ளனர்.

விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஷஹ்தாரா துணை காவல் ஆணையர் ஆர்.பி. மீனா, “இடிபாடுகளில் 6 பேர் சிக்கி இருந்தனர். ஆறு பேரும் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக ஹெட்கேவார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும், குஷ்பு என்ற 3 வயது சிறுமியும், பிந்து என்ற 30 வயது நபரும் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் தேவாம்ஷ் (27), விகேஷ் (35), ஆகாஷ் (25), டிம்பா (22) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் சுரேந்தர் சிங் என்பவருக்குச் சொந்தமான இந்த கட்டிடத்தில் வாடகைக்கு வசித்து வந்துள்ளனர். தொடர் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.” என தெரிவித்தார்.

இரு தினங்களுக்கு முன்பு, டெல்லி பஹார்கஞ்ச் பகுதியில் உணவக கட்டிடம் கட்டப்பட்டு வந்த நிலையில் இடிந்து விழுந்தது. இதில், இடிபாடுகளில் சிக்கி 8 பேர் காயமடைந்தனர். இதேபோல், கடந்த 5ம் தேதி சாவ்ரி பஜாரில் மற்றொரு நிகழ்ந்த கட்டிட விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். இதன் தொடர்ச்சியாக இந்த கட்டிட விபத்து நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT