இந்தியா

சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் சென்னை தொழிலதிபர் உட்பட 2 பேர் கைது

செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: சபரிமலை தங்​கம் திருட்டு வழக்​கில் சென்னை தொழில​திபர் உட்பட 2 பேர் கைது செய்​யப்​பட்டு உள்​ளனர்.

கேரளாவின் சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் துவார பால​கர் சிலைகளின் தங்க கவசம் மற்​றும் கதவு நிலைகளில் பதிக்​கப்​பட்​டிருந்த தங்க தகடு ஆகியவை திருடப்​பட்டு உள்​ளன. இதுதொடர்​பாக எஸ்​ஐடி விசா​ரணை நடத்தி வரு​கிறது. இந்த வழக்​கில் திரு​வி​தாங்​கூர் தேவசம் போர்டு முன்​னாள் தலை​வர் பத்ம குமார் உட்பட 7 பேர் கைது செய்​யப்​பட்​டனர்.

வழக்கு விசா​ரணை​யின்​போது சபரிமலை ஐயப்​பன் கோயில் துவார பால​கர் சிலைகளுக்கு தங்க முலாம் பூசிய சென்​னையை சேர்ந்த ஸ்மார்ட் கிரியேஷன்ஸ் நிறு​வனத்​தின் தலைமை செயல் அதி​காரி பங்​கஜ் பண்​டாரி நேற்று கைது செய்​யப்​பட்டார்.

துவார பால​கர் சிலைகளில் இருந்து திருடப்​பட்ட தங்​கத்தை கர்​நாட​கா​வின் பெல்​லாரியை சேர்ந்த ஜூவல்​லரி உரிமை​யாளர் கோவர்​தன் வாங்​கிய​தாக குற்​றம் சாட்​டப்​பட்டு உள்​ளது. அவரும் கைது செய்​யப்​பட்டு உள்​ளார். இருவரையும் அதிகாாிகள் திரு​வனந்​த​புரத்​துக்கு அழைத்து சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

சபரிமலை ஐயப்​பன் கோயில் தங்​கம் திருட்டு தொடர்​பாக அமலாக்​கத் துறை தனி​யாக விசா​ரணை நடத்தி வரு​கிறது. இந்த விசா​ரணைக்கு தடை விதிக்​கக் கோரி சிறப்பு புல​னாய்வு குழு (எஸ்​ஐடி) சார்​பில் கேரள உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது. இவ்​வழக்​கில் நேற்று முக்​கிய உத்​தரவு பிறப்​பிக்​கப்​பட்​டது.

“சபரிமலை தங்​கம் திருட்டு தொடர்​பாக அமலாக்​கத் துறை வழக்கு பதிவு செய்து விசா​ரணை நடத்​தலாம். இதுதொடர்​பான எப்​ஐஆர் உட்பட அனைத்து ஆவணங்​களை​யும் அமலாக்​கத் துறைக்கு எஸ்​ஐடி அதி​காரி​கள் வழங்க வேண்​டும்" என்று உயர் நீதி​மன்​றம் கண்​டிப்​புடன் உத்​தர​விட்​டது.

கேரளா​வில் ஆளும் மார்க்​சிஸ்ட் அரசு, சபரிமலை ஐயப்​பன் கோயில் தங்​கம் திருட்டு வழக்​கில் பல்​வேறு உண்​மை​களை மறைத்து வரு​வ​தாக காங்​கிரஸ், பாஜக உள்​ளிட்ட கட்​சிகள் குற்​றம் சாட்டி வரு​கின்​றன. தற்​போது மத்​திய புல​னாய்வு அமைப்​பான அமலாக்​கத் துறை களமிறங்​கி​யிருப்​ப​தால் பல்​வேறு உண்​மை​கள் வெளிச்​சத்​துக்​கு வரலாம்​ என்​று எதிர்​பார்க்​கப்​படுகிறது.

SCROLL FOR NEXT