இந்தியா

கர்நாடகாவின் 2-வது கூடுதல் நிர்வாக மொழி ஆகிறது துளு: அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

இரா.வினோத்

பெங்களூரு: கர்​நாடக மாநிலத்​தில் உள்ள தட்​சின கன்​ன​டா, உடுப்​பி, சிக்​கமகளூரு, ஷிமோகா உள்​ளிட்ட மாவட்​டங்​களில் துளு மொழி பரவலாக பேசப்​படு​கிறது.

திரா​விட மொழி குடும்​பத்தை சேர்ந்த இம்​மொழி​யும் கன்​னடத்​தைப் போல​வே, ஏராள​மான தமிழ் சொற்​களை கொண்​டிருக்​கிறது. இங்கு வாழும் மக்​கள் தங்​களின் மொழியை ஆட்சி மொழி​யாக அறிவிக்க வேண்​டும் என நீண்​ட​கால​மாக கோரி வந்​தனர்.

இந்​நிலை​யில் நேற்று முன் தினம் மாலை முதல்​வர் டி.கே.சிவகு​மார் தலை​மை​யில் கர்​நாடக அமைச்​சர​வைக் கூட்​டம் மங்​களூரு​வில் நடை​பெற்​றது.

அந்த கூட்​டத்​தில் துளு மொழிக்கு மாநிலத்​தின் இரண்​டாவது கூடு​தல் ஆட்சி நிர்​வாக மொழி அந்​தஸ்தை வழங்​கு​வது குறித்து விரி​வாக விவா​திக்​கப்​பட்​டது. அதற்கு அனைத்து அமைச்​சர்​களும் ஒப்​புதல் அளித்​ததை தொடர்ந்​து, அமைச்​சர​வை​யில் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது.

கர்​நாடக அரசின் இந்த நடவடிக்​கையை துளு மொழி சங்​கத்​தினரும், அம்​மக்​களும் பட்​டாசு வெடித்​தும் இனிப்​பு​கள் வழங்​கி​யும் கொண்​டாடினர். அதே வேளை​யில் கன்னட அமைப்​பினர் இதற்கு எதிர்ப்​பு தெரி​வித்​துள்​ளனர்​.

SCROLL FOR NEXT