இந்தியா

கொல்கத்தாவில் நில அதிர்வு!

செய்திப்பிரிவு

கொல்கத்தா: வங்​கதேசத்​தின் தென் மேற்கு பகு​தி​யில் 10 கி.மீ. ஆழத்​தில் நேற்று பிற்​பகல் 1.22 மணிக்கு நிலநடுக்​கம் ஏற்​பட்​டது. இது 5.5 ரிக்​டர் அளவில் பதி​வான​தாக இந்​திய தேசிய நிலநடுக்​க​வியல் மையம் உறுதி செய்​தது.

இதனால், வங்​கதேசத்​தின் அரு​கில் உள்ள மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்​கத்​தா​விலும் நில அதிர்​வு​கள் ஏற்​பட்​டன. வீடு​கள், கட்​டிடங்​கள் குலுங்​கின. இதனால் மக்​கள் பீதி அடைந்து சாலைகளில் தஞ்​சமடைந்​தனர். இந்த நில அதிர்​வால் அதிர்​ஷ்ட​வச​மாக உயிர்ச்சேதமோ, பொருட்​சேதமோ ஏற்​பட​வில்​லை.

          
SCROLL FOR NEXT