இந்தியா

கான்பூரில் பயிற்சி விமானம் விபத்து - 2 விமானிகள் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

கான்பூர்: கான்பூர் நகரக் காவல் ஆணை​யர் ரகுபீர் லால் கூறியதாவது: உத்தர பிரதேச மாநிலம் கான்​பூரில் உள்ள ‘கார்க் ஏவி​யேஷன்’ பயிற்சி மையத்​திலிருந்து இரட்டை இன்​ஜின் மற்​றும் 4 இருக்​கைகள் கொண்ட பயிற்சி விமானம் நேற்று காலை 11:30 மணிக்கு புறப்​பட்​டது. அதில், குஜ​ராத்​தைச் சேர்ந்த சச்​சின் பாட்டியா மற்​றும் கர்​நாட​காவைச் சேர்ந்த அபிஷேக் பூஜாரி ஆகிய 2 விமானிகள் பயணம் செய்​துள்​ளனர்.

அந்த விமானத்​தில் ஒரு​வர் பயிற்​றுந​ராக​வும் மற்​றொரு​வர் பயிற்சி விமானி​யாக​வும் இருந்​துள்​ளனர். மீண்​டும் பயிற்சி மையத்தை நோக்கி அந்த விமானம் திரும்​பிக் கொண்​டிருந்​த​போது, காலை 11:50 மணி​யள​வில் எதிர்​பா​ராத​வித​மாகக் கட்டுப்பாட்டை இழந்​தது. கான்​பூரில் கங்கை நதிக்​கரையோரம் உள்ள வயல்​வெளி​யில் அந்த பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கிய​தில் இரு விமானிகளும் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர்.

உயி​ரிழந்த பயிற்​றுநர் விமானிக்கு சுமார் 3,000 மணி நேரம் விமானத்தை இயக்​கிய அனுபவம் உள்​ளது. இவ்​வாறு ரகுபீர் தெரிவித்​தார். இந்த விபத்து குறித்து விரி​வான விசா​ரணை நடத்தி, விபத்​துக்கான சரி​யான காரணத்​தைக் கண்​டறி​யு​மாறு டிஜிசிஏ உத்​தர​விட்​டுள்​ளது.

முதல்​வர் இரங்​கல்: பயிற்சி விமான விபத்​தில் இரு விமானிகள் உயி​ரிழந்த சம்​பவம் குறித்து தகவல் அறிந்த உத்தர பிரதேச முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத், உயி​ரிழந்​தவர்​களின்​ குடும்பத்தினருக்​கு ஆழ்ந்​த இரங்​கலைத்​ தெரி​வித்​துள்ளார்.

SCROLL FOR NEXT