டெல்லியில் பிரதமர் மோடியை நேற்று மரியாதை நிமித்தமாக சந்தித்த தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்லேகர்.

 
இந்தியா

பிரதமர் மோடியுடன் ஆளுநர் அர்லேகர் சந்திப்பு: தமிழகத்தின் வளர்ச்சி குறித்து ஆலோசனை

செய்திப்பிரிவு

சென்னை: டெல்​லி​யில் குடியரசு துணைத் தலை​வர் சி.பி.ராதாகிருஷ்​ணன், பிரதமர் மோடி ஆகியோரை தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்​லேகர் சந்​தித்து வாழ்த்து பெற்​றார்.

தமிழக பொறுப்பு ஆளுநராக கடந்த 6 மாதங்​களாக பணி​யாற்றி வந்த கேரள ஆளுநர் ஆர்.வி.அர்​லேகர் அக்.13-ம் தேதி தமிழகத்​தின் முழுநேர ஆளுநராக நியமிக்​கப்​பட்​டார். அவர் அக்.16-ம் தேதி முழுநேர ஆளுநராகப் பொறுப்​பேற்​றார். இதைத் தொடர்ந்து, முதல்​வர் விஜய் ஆளுநர் மாளி​கைக்கு சென்று அவருக்கு வாழ்த்து தெரி​வித்​தார்.

இந்த நிலை​யில், தமிழக முழுநேர ஆளுநராக பொறுப்​பேற்ற பிறகு அர்​லேகர் டெல்லி சென்று கடந்த 2 நாட்​களாக முக்​கிய பிர​முகர்​களை சந்​தித்து வாழ்த்து பெற்று வரு​கிறார்.

கடந்த 5-ம் தேதி குடியரசுத் தலை​வர் திரவுபதி முர்மு, முன்​னாள் குடியரசுத் தலை​வர் ராம்​நாத் கோவிந்த் ஆகியோரை சந்​தித்து வாழ்த்து பெற்​றார். நேற்று குடியரசு துணைத் தலை​வர் சி.பி.ராதாகிருஷ்​ணன், பிரதமர் மோடி ஆகியோரை சந்​தித்து வாழ்த்து பெற்​றார்.

பிரதமர் உடனான ஆளுநரின் சந்​திப்பு குறித்து ஆளுநர் மாளிகை வெளி​யிட்ட எக்ஸ் வலை​தளப் பதி​வில் கூறியுள்​ள​தாவது: டெல்​லி​யில் பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்​லேகர் சந்​தித்​தார். தமிழகத்​தின் வளர்ச்சி மற்​றும் தமிழக மக்​களின் நலன், மேம்​பாடு குறித்து அவர்​கள் ஆலோ​சனை நடத்​தினர். தனக்கு அளிக்​கப்​பட்ட உற்​சாக வரவேற்​புக்கு மற்​றும் மதிப்​புமிகு கலந்​துரையாடலுக்​காக பிரதமருக்கு ஆளுநர் நன்றி தெரி​வித்​தார். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT