இந்தியா

ஜெகன் மோகனுக்கு ஆசீர்வாதம் செய்த 2 அர்ச்சகருக்கு நோட்டீஸ்

செய்திப்பிரிவு

திருப்பதி: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான ஜெகன் மோகன், கடந்த 21ம் தேதி தனது சொந்த தொகுதியான புலிவேந்துலாவுக்கு சென்றார்.

அப்போது திருப்பதி தேவஸ்தானத்துக்கு உட்பட்ட ஒண்டிமிட்டா கோதண்டராமர் கோயில் அர்ச்சகர், ராஜம்பேட்டை போயனபல்லி வெங்கடேஸ்வர சுவாமி கோயில் அர்ச்சகர் புலிவேந்துலாவில் உள்ள ஜெகன் வீட்டுக்கு சென்றனர். அங்கு அவருக்கு பிரசாதங்களை வழங்கி ஆசீர்வாதம் செய்தனர். இதுபற்றி தகவல் அறிந்த திருப்பதி தேவஸ்தானம், விளக்கம் கேட்டு 2 அர்ச்சகர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

SCROLL FOR NEXT