கோப்புப்படம்

 
இந்தியா

கலப்பட நெய் விவகாரத்தில் திருப்பதி தேவஸ்தான மேலாளர் கைது

செய்திப்பிரிவு

திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு மே மாதம் வரை ரூ.250 கோடிக்கு டெண்டர் எடுத்த நெய் ஒப்பந்ததாரர்கள், 40-சதவீதம் வரை கலப்பட நெய்யை திருப்பதி தேவஸ்தானத்திற்கு வழங்கி உள்ளது உச்ச நீதிமன்றத்தால் சிபிஐ தலைமையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை மூலம் தெரியவந்தது.

இதுவரை இவ்வழக்கில் ஒப்பந்ததாரர்கள், அவர்களுக்கு உதவிய மற்ற பால் நிறுவன அதிகாரிகள் என மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கு உடந்தையாக இருந்ததாக திருப்பதி தேவஸ்தானத்தின் கொள்முதல் பிரிவின் பொது மேலாளர் சுப்பிரமணியம் நேற்று கைது செய்யப்பட்டார். இதனால் இவ்வழக்கில் கைதானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. கைது செய்யப்பட்ட சுப்பிரமணியத்தை நேற்று திருப்பதியில் இருந்து அதிகாரிகள் நெல்லூர் அழைத்து சென்று, அங்குள்ள லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

SCROLL FOR NEXT