திருமலை: திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் 3-ம் நாளான நேற்று காலை சிம்ம வாகனத்தில் மலையப்பர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் கடந்த 15-ம் தேதி, கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 3-ம் நாளான நேற்று காலை மலையப்பர் சிம்ம வாகனத்தில் யோக முத்திரையில் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.
மாட வீதிகளில் ஜீயர் குழுவினர், யானை, குதிரை, காளை போன்ற பரிவட்டங்கள், 8 மாநில குழுவினரின் நடன நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இரவு முத்துப்பல்லக்கு வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இன்று புரட்டாசி மாதம் பிறப்பதால் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் திருமலைக்கு படை எடுத்த வண்ணம் உள்ளனர்