இந்தியா

திருப்பதி பிரம்மோற்சவம் 2-ம் நாள் விழா: சின்ன சேஷ வாகனத்தில் மலையப்பர் பவனி

என். மகேஷ்குமார்

திருமலை: திருப்பதி ஏழு​மலை​யான் கோயில் பிரம்மோற்சவம் கோலாகல​மாக தொடங்கி உள்ள நிலை​யில், நேற்று காலை 2-ம் நாள் பிரம்​மோற்​சவத்​தின் பாக​மாக உற்சவ மூர்த்​தி​யான மலையப்​பர், வாசுகி​யாக கருதப்​படும் சின்ன சேஷ வாக​னத்​தில், பாண்​டுரங்​கர் அலங்​காரத்​தில் எழுந்​தருளி​னார். 4 மாட வீதிகளிலும் திரளான பக்​தர்​கள் ‘கோ​விந்தா கோவிந்​தா’ என கோஷமிட்​ட​வாறு சுவாமியை தரிசித்​தனர்.

வாகன சேவைக்கு முன் யானை, குதிரை, காளை ஆகிய பரிவட்டங்​கள் செல்ல, அவற்​றிற்கு பின் ஜீயர் சுவாமிகளும் அவரது கோஷ்டிகளும் நாலா​யிரம் திவ்ய பிரபந்​தத்தை பாடியபடி சென்​றனர். இவர்​களுக்கு பின்​னால், ஆந்​தி​ரா, தெலங்​கா​னா, தமிழகம் உள்பட 9 மாநிலங்​களை சேர்ந்த 539 நடன கலைஞர்​கள் கோலாட்​டம், ஒயி​லாட்​டம், ஒடிசி போன்ற நடனங்​களு​டன் மாட வீதி​களில் நடன​மாடினர்.

இதனை தொடர்ந்து நேற்று மாலை ஏழு​மலை​யான் கோயி​லில் உற்சவ மூர்த்​தி​களான ஸ்ரீதே​வி, பூதேவி சமேத மலை​யப்​பருக்கு சிறப்பு திரு​மஞ்​சனம் நடத்​தப்​பட்​டது. பின்​னர், ஏலக்​காய், வெட்டி வேர், உலர் திராட்​சை, பாதாம், பிஸ்தா போன்​றவற்​றால் கிரீடம், மாலைகள் சூட்டி அலங்​காரம் செய்​யப்​பட்​டன. இரவு அன்ன வாகனத்​தில் ஸ்ரீதே​வி, பூதேவி சமேத​மாய் மலை​யப்​பர் எழுந்தருளி பக்தர்​களுக்கு அருள் பாலித்​தனர். இதில் திரளான பக்தர்கள் பங்​கேற்று மாட வீதி​களில்​ வாக​ன சேவையை கண்டுகளித்​தனர்​

SCROLL FOR NEXT