இந்தியா

மகாராஷ்டிராவில் போலீஸார் உட்பட 11,000 பேரிடம் ரூ.500 கோடி மோசடி செய்த தம்பதி உட்பட 3 பேர் கைது

செய்திப்பிரிவு

மும்பை: ம​கா​ராஷ்டி​ரா​வைச் சேர்ந்த சமீர் நார்​வேகர், அவரது மனைவி நேகா மற்​றும் அமித் பலாவ் ஆகிய 3 பேரும் சேர்ந்து 2019ம் ஆண்​டில் புனே​வைத் தலை​மை​யிட​மாகக் கொண்டு ‘டிரேட் வித் ஜாஸ்' என்ற நிறு​வனத்​தைத் தொடங்கி உள்​ளனர்.

இந்​நிறு​வனம் அறி​வித்த கவர்ச்​சிகர​மான திட்​டத்தை நம்பி அம்மாநிலம் முழு​வ​தி​லும் இருந்து 1,500 காவல் துறை பணி​யாளர்​கள், ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் உட்பட 11,000-க்​கும் மேற்​பட்​டோர் முதலீடு செய்​துள்​ளனர். பங்​குச் சந்தை வர்த்​தகம் மற்​றும் அது சார்ந்த தொழில்​கள் மூலம் முதலீட்​டாளர்​களுக்கு மாதம் 4% லாபம் தரு​வ​தாக ஆசை வார்த்தை கூறி இக்​கும்​பல் முதலீடு​களை ஈர்த்​துள்​ளது. சுமார் ரூ.500 கோடி வரை பொது​மக்​கள் முதலீடு செய்​துள்​ளனர்.

          

இந்​நிலை​யில், அந்த நிறு​வனம் திடீரென மூடப்​பட்​டது. அத்​துடன் அதன் உரிமை​யாளர்​கள் தலைமறை​வா​யினர். பாதிக்​கப்​பட்​ட​வர்கள் இது தொடர்​பாக காவல் துறை​யில் புகார் செய்​தனர். இந்த வழக்கு தானே காவல் துறை​யின் பொருளா​தார குற்​றப் பிரிவுக்கு மாற்​றப்​பட்​டது. இதன் அடிப்​படை​யில், தலைமறை​வாக இருந்த 3 பேரை​யும் பொருளா​தார குற்​றப் பிரிவு போலீ​ஸார் தேடி வந்​தனர். இந்​நிலை​யில், குஜ​ராத் மாநிலத்​தில் இருந்த அவர்​களை கடந்த வியாழக்​கிழமை கைது செய்​த​தாக போலீ​ஸார் நேற்று தெரிவித்தனர்.

தற்​போது தானே பொருளா​தார குற்​றப்​பிரி​வினர் அவர்​களின் வங்கிக் கணக்​கு​கள் மற்​றும் நிதி பரிவர்த்​தனை​களை ஆய்வு செய்து வரு​கின்​றனர். இந்த வழக்​கில் மேலும் பலர் கைது செய்யப்​பட வாய்ப்​புள்​ள​தாகக்​ கூறப்​படு​கிறது.

SCROLL FOR NEXT