இந்தியா

உத்தராகண்டில் கேதார்தால் மலைப் பகுதியில் மாயமான 8 வீரர்களை தேடும் பணி 3-ம் நாளாக தொடர்கிறது

செய்திப்பிரிவு

உத்தரகாசி: உத்தராகண்ட் மாநிலம் கங்​கோத்ரி தேசி​யப் பூங்கா எல்​லைக்​குட்​பட்ட புகழ்​பெற்ற கேதார்தால் பகுதி​யில் மலையேற்றம் சென்ற 8 பேர் மாய​மாகி​யுள்​ளனர். அவர்களை தேடும் பணி 3-வது நாளாக நடைபெற்று வருகிறது.

கடந்த அக்​டோபர் 27-ம் தேதி, 8 மலை​யேற்ற வீரர்​கள் உள்ளிட்ட 13 பேர் குழு, உத்​த​ராகண்​டின் கேதார்​தால் நோக்​கிய 3 நாள் பயணத்தைத் தொடங்​கியது. அக்​குழு புறப்​பட்ட சில மணி நேரங்களி​லேயே, அக்​டோபர் 29-ம் தேதி மோச​மான வானிலை நில​வும் என எச்​சரிக்கை வந்​தது. ஆனால், அதற்​குள் மலை​யேற்றக் குழு​வினர் தொடர்​பற்ற தொலை​தூரப் பகுதிக்​குச் சென்று​விட்​ட​தால் அதி​காரி​களால் அவர்​களை எச்​சரிக்க முடியவில்லை.

திட்​ட​மிட்​டபடி 29-ம் தேதி திரும்ப வேண்​டிய இக்​குழு​வினர், 12 இடங்​களில் ஏற்​பட்ட பனிச்​சரிவு காரண​மாகப் பாதி​யிலேயே முடங்​கினர். அக்​டோபர் 31 அன்று கச்சிடாங் அருகே பனியை விலக்கி பாதை அமைத்த மீட்​புக்குழு​வினர், 5 பேரை பத்​திர​மாக மீட்டு கங்​கோத்​ரிக்கு அழைத்து வந்​தனர். எஞ்​சிய 8 பேர் மாயமாகி​யுள்​ளனர்.

இந்​நிலை​யில், மாநில பேரிடர் மீட்​புப்படை, தேசிய பேரிடர் மீட்புப்படை, நேரு மலை​யேற்​றப் பயிற்சி நிறு​வனத்​தின் 4 வல்லுநர்​கள், 5 மீட்​புக்குழு​வினர் ஹெலிகாப்​டர் மூலம் பனிச்​சரிவு பகுதி​யில் இறங்கி தரைவழித் தேடலைத் தொடங்​கி​னர். ஆனால், இது​வரை அவர்​களின் கூடாரங்​களோ, அவசர உதவி சிக்னல்களோ தென்​பட​வில்லை என எஸ்டிஆர்​எப் கமாண்​டன்ட் அர்​பன் யது​வன்ஷி தெரி​வித்​துள்​ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT