புதுடெல்லி: இந்தியா, அமெரிக்கா இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் முதற்கட்ட பகுதி இறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, “இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தின் முதற்கட்ட பகுதி இறுதி செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. தற்போது அதற்கான சட்டப்பூர்வ வரைவு தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், இந்தியா, ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வரும் டிசம்பர் மாதத்தில் கையெழுத்தாக உள்ளது. இதையடுத்து, அந்த ஒப்பந்தம் அடுத்த ஆண்டின் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் அமலுக்கு வரும்” என்றார்.
முன்னதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்திய-அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தையில் சற்று தேக்கநிலை காணப்படுவதாக கூறிய நிலையில் பியூஷ் கோயல் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும், அமெரிக்க வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாக மத்திய வர்த்தகத் துறை செயலர் ராஜேஷ் அகர்வாலும் உறுதிப்படுத்தியுள்ளார்.
Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.