இந்தியா

அமைதியாக வாக்குப் பதிவை நடத்திய தேர்தல் ஆணையத்துக்கு நன்றி: சுவேந்து அதிகாரி புகழாரம்

செய்திப்பிரிவு

நந்திகிராம்: மேற்​கு​வங்க முதல் கட்ட வாக்​குப் பதிவை அமை​தி​யாக நடத்​திய தேர்​தல் ஆணை​யத்​துக்கு நன்றி என்று பாஜக மூத்த தலை​வர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்​ளார்.

திரிண​மூல் காங்​கிரஸின் மூத்த தலை​வ​ராக​வும் முதல்​வர் மம்தா பானர்​ஜி​யின் அமைச்​சர​வை​யிலும் இடம்​பெற்​றிருந்த சுவேந்து அதி​காரி, கடந்த 2021 சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்கு முன்​பாக பாஜக​வில் இணைந்​தார். அப்​போதைய சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் நந்​தி​கி​ராம் தொகு​தி​யில் முதல்​வர் மம்தா பானர்​ஜியை எதிர்த்து அவர் போட்​டி​யிட்​டார். இந்த தொகு​தி​யில் மம்​தாவை சுவேந்து அதி​காரி தோற்​கடித்​தார்.

இதன்​பிறகு பவானிபூர் சட்​டப்​பேரவை இடைத்​தேர்​தலில் மம்தா போட்​டி​யிட்டு வெற்றி பெற்​றார். தற்​போதைய சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் நந்​தி​கி​ராம், பவானிபூர் ஆகிய 2 தொகு​தி​களில் பாஜக மூத்த தலை​வர் சுவேந்து அதி​காரி போட்​டி​யிடு​கிறார். இதில் நந்​தி​கி​ராம் தொகு​தி​யில் திரிண​மூல் மூத்த தலை​வர் பபித்ரா கர்​ரை​யும் பவானிபூரில் முதல்​வர் மம்​தாவை​யும் அவர் எதிர்​கொள்​கிறார்.

நேற்று நடை​பெற்​ற வாக்​குப்​ப​திவின்போது பாஜக வேட்​பாளர் சுவேந்து அதி​காரி, நந்​தனா அக்​பர் பகு​தி​யில் உள்ள வாக்​குச்​சாவடி​யில் வாக்​குச் செலுத்​தி​னார். அப்​போது அவர் நிருபர்​களிடம் கூறிய​தாவது: தேர்​தலுக்கு முந்​தைய நாள் இரவில் அமை​தியை சீர்​குலைக்க திரிண​மூல் காங்​கிரஸ் தொண்​டர்​கள் திட்​ட​மிட்டு இருந்​தனர்.

ஆனால், பலத்த பாது​காப்​புக் காரண​மாக அவர்​களால் வன்​முறை சம்​பவங்​களை அரங்​கேற்ற முடிய​வில்​லை. முதல் கட்ட தேர்​தலில் வாக்​குப் பதிவு சதவீதம் கணிச​மாக அதி​கரித்து உள்​ளது. இதன் மூலம் பொது​மக்​கள் ஆட்சி மாற்​றத்தை விரும்​பு​கிறார்​கள் என்​பது தெளி​வாகிறது. இந்த தேர்​தலில் பாஜக அபார வெற்றி பெற்று ஆட்சி அமைக்​கும். முதல்​வர் மம்தா ஆட்​சி​யில் சனாதன தர்​மம் அழிக்​கப்​பட்டு உள்​ளது. இவ்​வாறு சுவேந்​து அதி​காரி தெரிவித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT