ஹைதராபாத்: தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லியில் ஒரு கூட்டத்தில் பங்கேற்றார். அங்கிருந்து விமானம் மூலம் லண்டன் புறப்பட்டுச் சென்றார்.
லண்டனில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், யூனிவர்ஸிட்டி ஆஃப் லண்டன், லண்டன் பிஸினஸ் ஸ்கூல் ஆகிய இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்குள்ள கல்வி முறைகளைக் கேட்டறிந்தார். இந்நிலையில், இன்று லண்டனில் இருந்து அமெரிக்காவுக்குச் சென்று, அங்குள்ள சில பல்கலைக்கழகங்களைப் பார்வையிட இருந்தார்.
இதற்காக, இவர் செல்வதற்கு முன்பாகவே லண்டன் மற்றும் அமெரிக்க நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்குத் தெலங்கானா அரசு தகவல் தெரிவித்தது. ஆனால், தற்போது அமெரிக்கா செல்ல வெளியுறவுத்துறை அமைச்சகம் அனுமதி மறுத்துள்ளது. இதனால், ரேவந்த் ரெட்டி நாளை லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு ஹைதராபாத் வர உள்ளார்.