சுந்தர்ராஜ் என்ஐஏ ஐஜி

 
இந்தியா

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளுக்கு முடிவு கட்டிய தமிழர் சுந்தர்ராஜ் என்ஐஏ ஐஜியாக நியமனம்

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: இந்​தி​யா​வில் நக்​சலைட்​டு​கள் நடமாட்​டம் அதி​கம் இருந்த மாநிலம் சத்​தீஸ்​கர். மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷாவின் திட்​ட​மிட்ட நடவடிக்​கைகள் மூலம் கடந்த மார்ச் 31ம் தேதி​யுடன் நக்​சலைட்​டு​கள் இல்லா மாநில​மாக சத்​தீஸ்​கர் அறிவிக்​கப்​பட்​டது. நக்​சலைட்​டு​கள் பலர் கொல்​லப்​பட்​டனர். சரணடைந்த பலருக்கு மறு​வாழ்​வுக்​கான உதவி​கள் செய்யப்பட்டுள்​ளன.

சத்​தீஸ்​கரின் நக்​சல் ஆதிக்​கம் இருந்த பஸ்​தர் காட்டு பகு​தி​யில் 12 ஆண்​டு​கள் பணி​யாற்​றிய மூத்த ஐபிஎஸ் அதி​காரி பி.சுந்​தர்​ராஜ். இவர் தமிழ்​நாட்​டின் கோவையைச் சேர்ந்​தவர். கடந்த 2003-ம் ஆண்டு சத்​தீஸ்​கர் மாநிலப் பிரி​வில் தேர்ச்​சிப் பெற்​றவர். இவர் பஸ்​தர் பகு​தி​யில் நக்​சல் பாதிப்​புக்கு உள்​ளான 7 மாவட்​டங்​களில் அடுத்​தடுத்து பணி​யாற்றி உள்​ளார். மத்​திய பாது​காப்​புப் படைகளு​டன் இணைந்து சுந்​தர்​ராஜ் சிறப்​புடன் பணி​யாற்​றி​னார்.

இவரது திறமை​யான செயல்​பாடு​கள், பாது​காப்​புப் படைகளுக்கு இடையே சிறந்த ஒருங்​கிணைப்பை ஏற்​படுத்​தி​யது போன்ற பல நடவடிக்​கைகளுக்​காக சுந்​தர்​ராஜ் பெரிதும் பாராட்​டப்​படு​கிறார். நக்​சலைட் ஒழிப்​பில் இவரது பங்கு மிகப்​ பெரிய​தாக இருந்​தது.

முன்​ன​தாக நக்​சலைட்​டு​களை ஒடுக்​கும் திறன் கொண்ட ஒரு காவல் படையை உரு​வாக்க 2005-ல் மத்​திய அரசு முடிவு எடுத்​தது. இதற்​காக பஸ்​தர் காடு​கள் பகு​தி​யில், ‘கிளர்ச்சி எதிர்ப்பு மற்​றும் காட்​டுப் போர் முறைப் பயிற்​சிப் பள்​ளி’ அமைக்​கப்​பட்​டது. இதில், மேம்​பட்ட கமாண்டோ பயிற்​சியை மேற்​கொண்ட முதல் காவல் அதி​காரி​களில் சுந்​தர்​ராஜ் இடம்​பெற்​றார்.

ஐஜி​யான சுந்​தர்​ராஜின் திறமையை பயன்​படுத்​திக் கொள்​ளும் வித​மாக, தற்​போது தேசிய புல​னாய்வு முகமை​யின் (என்​ஐஏ) ஐ.ஜி.யாக பணி நியமனம் செய்து மத்​திய உள்​துறை அமைச்​சகம் உத்​தர​விட்​டுள்​ளது. சுந்​தர்​​ராஜை உடனடி​யாக பணி​யில்​ இருந்​து விடுவிக்​கு​மாறு சத்​தீஸ்​கர்​ அரசுக்​கு மத்​திய உள்​துறை அமைச்சகம்​ உத்​தர​விட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT