கொல்கத்தா: பிரதமர் மோடி ஆண்டுதோறும் எல்லையில் உள்ள பாதுகாப்புப் படையினருடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகிறார். இதைப் பின்பற்றி மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி, தீபாவளியன்று வங்கதேச எல்லையில் அமைந்துள்ள எல்லை பாதுகாப்பு படையின் (பிஎஸ்எப்) 74-வது பட்டாலியன் முகாம் சென்றிருந்தார். அங்கு வீரர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.
இச்சாமதி நதியில் பிஎஸ்எப்-ன் வேகப் படகில் பயணம் செய்தார். அப்போது சுவேந்து அதிகாரி,‘‘நான் பைனாகுலர் மூலம் சுற்றுப்பகு தியைப் பார்வையிட்டேன். பிஎஸ்எப் வீரர்கள் கவனக்குறைவாக இருக்கும் தருணத்தில் உள்ளே நுழைந்துவிடலாம் என்று ஊடுரு வல்காரர்கள்் பதுங்கி்யுள்ளனர். வங்கதேசத்தவர் ஒருவர்கூட ஊடுருவு வதை அனுமதிக்கமாட்டோம்,’’ என்றார்.