இந்தியா

நந்திகிராமில் சுவேந்து அதிகாரி வேட்புமனு தாக்கல்

செய்திப்பிரிவு

கொல்கத்தா: மேற்கு வங்க சட்​டப்​பேர​வைக்கு ஏப்​ரல் 23, 29 ஆகிய தேதி​களில் 2 கட்​டங்​களாக தேர்​தல் நடை​பெற உள்​ளது. இத்​தேர்​தலில் பாஜக மூத்த தலை​வரும் சட்​டப்​பேரவை எதிர்க்​கட்​சித் தலை​வரு​மான சுவேந்து அதி​காரி, நந்​தி​கி​ராம், பவானிபூர் ஆகிய 2 தொகு​தி​களில் போட்​டி​யிடு​கிறார். இந்​நிலை​யில் நந்​தி​கி​ராம் தொகு​திக்​கான வேட்​புமனுவை கிழக்கு மிட்​னாப்​பூர் மாவட்​டம் ஹல்​டி​யா​வில் நேற்று தாக்​கல் செய்​தார்.

அம்​மாவட்​டத்தை சேர்ந்த மேலும் இரு பாஜக வேட்​பாளர்​கள் அதி​காரி​யுடன் இணைந்து தங்​கள் வேட்பு மனுவை தாக்​கல் செய்​தனர். மத்​திய அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான், மாநில பாஜக முன்​னாள் தலை​வர் திலீப் கோஷ் உள்​ளிட்​டோர் அப்​போது உடனிருந்​தனர்.

          

ஊழலற்ற ஆட்சி: பின்​னர் சுவேந்து அதி​காரி பேசுகை​யில், “இந்த முறை வாக்​காளர்​களிடையே பாஜக​வுக்​கான ஆதர​வும் தேவை​யும் மிக அதி​க​மாக உள்​ளது. மேற்கு வங்​கத்​தில் ஒரு தூய்​மை​யான, ஊழலற்ற, வளர்ச்சி சார்ந்த மற்​றும் நெறி​யான அரசை அமைப்​ப​தில் பாஜக உறு​தி​யுடன் உள்​ளது. நந்​தி​கி​ராம், பவானிப்​பூர் ஆகிய இரு தொகு​தி​களி​லும் நான் வெற்றி பெறு​வேன்” என்​றார்.

முதல்​வர் மம்தா பானர்​ஜி, நீண்டகால​மாக தக்​க​வைத்து வரும் பவானிப்​பூரில் அவருக்கு எதி​ராக சுவேந்து அதி​காரி போட்​டி​யிடு​கிறார். கடந்த 2021 சட்​டப்​பேரவை தேர்​தலில், நந்​தி​கி​ராமில் முதல்​வர் மம்தாவை மிகக் குறைந்த வாக்கு வித்​தி​யாசத்​தில் சுவேந்து அதி​காரி தோற்​கடித்​தார். இதனால் மக்​களால் மிக​வும் கவனிக்​கப்​படும் தொகு​தி​யாக பவானிப்​பூர்​ மாறியுள்​ளது.

SCROLL FOR NEXT