பிரதிநிதித்துவப் படம்

 
இந்தியா

வலது காலுக்கு பதில் இடது காலில் அறுவை சிகிச்சை: ராஜஸ்தானில் மருத்துவர் வேறு பணிக்கு உடனடி மாற்றம்

செய்திப்பிரிவு

ஜெய்ப்பூர்: ராஜஸ்​தான் மாநிலம் ஜோத்​பூரில் உள்ள மதுர தாஸ்மாத்​தூர் அரசு மருத்​து​வ​மனைக்கு சம்பா தேவி (66) என்ற பெண் தனது காலில் ஏற்​பட்ட எலும்பு முறி​வுக்கு சிகிச்சை பெற வந்​தார். அவரை பரிசோ​தித்த போது இரு காலிலும் எலும்பு முறிவு ஏற்​பட்​டிருந்​தது. வலது காலில் அறுவை சிகிச்சை செய்ய தீர்மானிக்​கப்​பட்​டது.

கடந்த ஏப்​ரல் 27-ம் தேதி சம்பா தேவிக்கு அறுவை சிகிச்சை செய்யப்​பட்​டது. இந்​நிலை​யில் எலும்​பியல் நிபுணர் ராமகிருஷ்ணன் சவுத்​ரி, வலது காலுக்கு பதிலாக இடது காலில் அறுவை சிகிச்சை மேற்​கொண்​டார். அறுவை சிகிச்​சைக்​குப் பின்பே இது தெரிய​வந்​தது.

இதுகுறித்து மருத்​து​வ​மனை நிர்​வாகம் சிறப்​புக் குழு அமைத்து விசா​ரணை நடத்​தி​யது. அறுவை சிகிச்​சை​யின்​போது பின்பற்றப்படும் நிலை​யான செயல்​பாட்டு விதி​முறை​களை (எஸ்ஓபி) பின்​பற்​றாமல், கவனக்​குறை​வாக தவறான காலில் அறுவை செய்​தது தெரிய வந்​தது. இதையடுத்​து, மருத்​து​வர் ராமகிருஷ்ணன் சவுத்ரி பணி​யில் இருந்து உடனடி​யாக நீக்கப்பட்டு, மருத்​து​வக்​ கல்​வித்​ துறைக்​கு ​மாற்​றப்​பட்​​டார்​.

SCROLL FOR NEXT