இந்தியா

ஊழியர்களுக்கு ரூ.1 லட்சம் தீபாவளி போனஸ்: சூரத் ஜவுளி வியாபாரி தாராளம்

செய்திப்பிரிவு

சூரத்: குஜராத் மாநிலம் சூரத்தில் ‘மகாதேவ் கிளாத் சென்டர்’ என்ற பெயரில் ஜவுளி கடையை நடத்தி வருகிறார் ராம்ஸ்வரூப் முண்டே.

இவர் தனது நிறுவனத்தின் 20 ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக தலா ரூ.1 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக வழங்கினார்.

இது தொடர்பான வீடியோ பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டு வருகிறது. ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.200, ரூ.500 நோட்டுக் கட்டுகள் பளபளக்கும் வெள்ளி நிறப் பூஜைத் தட்டுகளில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

பல ஊழியர்களின் மனைவிகளிடம் நேரடியாகவே பணம் ஒப்படைக்கப்பட்டது. வழக்கமான போனஸ் வழங்கும் முறையிலிருந்து மா

றுபட்ட இந்த நிகழ்வு, ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் மறக்க முடியாத தீபாவளிக் கொண்டாட்டமாக அமைந்தது.

எதிர்பாராத இந்தப் பரிசைப் பெற்றபோது, குறிப்பாகப் பெண்கள் பலர் உணர்ச்சிவசப்பட்டனர். சிலர் கண் கலங்கினர்.

எதிர்பாராத இந்தப் பரிசைப் பெற்றபோது, குறிப்பாகப் பெண்கள் பலர் உணர்ச்சிவசப்பட்டனர். சிலர் கண் கலங்கினர்.

தன் செயலுக்கான காரணம் குறித்து ராம்ஸ்வரூப் முண்டே கூறுகையில், “ஊழியர்கள் எனது குடும்பத்தின் ஒரு பகுதி. அவர்களின் உழைப்பால்தான் என் தொழில் வளர்கிறது.

எனவே, என் குடும்பத்தினரான அவர்கள் பணத் தட்டுப்பாடின்றி, மகிழ்ச்சியாக தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என்பதற்காகவே இதைச் செய்தேன்” என்றார்.

இந்த போனஸ் சில ஊழியர்களின் கனவுகளை நனவாக்கியுள்ளது. “இவ்வளவு பெரிய தொகை கிடைக்கும் என நான் நினைக்கவில்லை.

வீடு வாங்கும் எனது கனவு இதன் மூலம் நிறைவேறும்” என்று ரேகாபென் பலாதா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

“எனக்கும் இதுபோன்ற வேலை வேண்டும்” என நெட்டிசன்கள் பதிவிட்டு வருவதுடன், தொழிலதிபரின் பெருந்தன்மையைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT