நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்
புதுடெல்லி: மத்திய சட்ட அமைச்சக உயர் அதிகாரி போல் சுகேஷ் சந்திரசேகர் நடித்து ரூ. 200 கோடி மிரட்டிப் பணம் பறித்த விவகாரத்தில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இது தொடர்பான வழக்கு டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஜாக்குலின் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை நீதிபதிகள் பி.வி. நாக ரத்னா, ஜோய்மால்யா பக்சி அடங்கிய அமர்வு விசாரித்தது, சட்டப்படியான தீர்வுகளை ஆராயும் நோக்கில் மனுவைத் திரும்ப பெற ஜாக்குலின் விடுத்த கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், அவர் தாக்கல் செய்த மனுவைத் திரும்ப பெற அனுமதி அளித்து வழக்கை முடித்து வைத்தனர்.