இந்தியா

ஆம் ஆத்மி கட்சியின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் கணக்கை முடக்கியதை நீக்க மெட்டாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: கடந்த ஏப்​ரல் மாத இறு​தி​யில் குஜ​ராத் உள்​ளாட்​சித் தேர்​தல்​கள் நடை​பெறு​வதற்கு சில நாட்​களுக்கு முன்​பாக, ஆம் ஆத்மி கட்சி​யின் குஜ​ராத் மாநிலப் பிரி​வின் பேஸ்புக் மற்​றும் இன்ஸ்டாகிராம் பக்​கங்​கள் திடீரென முடக்​கப்​பட்​டன.

தகவல் தொழில்​நுட்ப சட்​டத்​தின் கீழ் அரசும், காவல் துறை​யும் அளித்த தகவலின் பேரில் கணக்​கு​கள் முடக்​கப்​பட்​ட​தாக மெட்டா நிறு​வனம் விளக்​கமளித்​திருந்​தது.

இருப்​பினும், கணக்​கு​களை முடக்​கு​வதற்​கான எந்​தவொரு முறையான காரண​மும் அல்​லது முன்​னறி​விப்​பும் தங்​களுக்கு வழங்கப்பட​வில்லை எனக்​கூறி ஆம் ஆத்மி கட்சி உச்ச நீதி​மன்றத்தில் வழக்கு தொடுத்​தது.

இந்த வழக்கு நீதிப​தி​கள் பி.எஸ்​.நரசிம்​மா, அலோக் ஆராதே ஆகியோர் அடங்​கிய அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, ஆட்​சேபனைக்​குரிய உள்​ளடக்​கங்​கள் இருந்​தால் அதனை நீக்கி விட்டு ஆம் ஆத்மி கட்​சி​யின் குஜ​ராத் மாநில சமூக வலை​தளக் கணக்​கு​கள் மீதான முடக்​கத்தை உடனடி​யாக நீக்​கு​மாறு மெட்டா நிறு​வனத்​திற்கு உத்​தர​விட்​டு, வழக்கு மீதான வி​சா​ரணையை இரண்டு வார காலத்​துக்​கு ஒத்​தி​வைத்​தனர்​.

SCROLL FOR NEXT