இந்தியா

டிஜிட்டல் கைது முறைகேடு வழக்குகளை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாடு முழு​வது​மான டிஜிட்​டல் கைது முறை​கேடு வழக்​கு​களை சிபிஐ விசா​ரணைக்கு மாற்றி உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்ளது.

டிஜிட்​டல் கைது முறை​கேடு​கள் தொடர்​பாக உச்ச நீதி​மன்​றம் தாமாக முன்​வந்து பதிவுசெய்த வழக்​கை, தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலை​மையி​லான அமர்வு விசா​ரித்து வரு​கிறது. இந்த வழக்​கில் நேற்​றைய விசா​ரணைக்கு பிறகு தலைமை நீதிபதி அமர்வு பிறப்​பித்த உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது:

டிஜிட்​டல் கைது முறை​கேடு வழக்​கு​களை முதலில் சிபிஐ விசா​ரிக்க வேண்​டும். சைபர் குற்​றங்​கள் தொடர்​புடைய வழக்​கு​களை படிப்​படி​யாக சிபிஐ விசா​ரணைக்கு மாற்ற வேண்​டும். டிஜிட்​டல் கைது முறை​கேடுக்கு துணை​போகும் வகை​யில் வங்​கிக் கணக்கு தொடங்க உதவிய வங்கி அதி​காரி​களை​யும் சிபிஐ விசா​ரிக்க வேண்​டும். போலி​யான வங்​கிக் கணக்​கு​களை கண்​டறிய ஏஐ உள்​ளிட்ட நவீன தொழில்​நுட்​பங்​களை பயன்​படுத்த வேண்​டும். இது தொடர்​பான ஆலோ​சனை​களை வழங்​கும் வகை​யில் இந்த விவ​காரத்​தில் ரிசர்வ் வங்​கியை இணைக்​கிறோம்.

இந்த விசா​ரணைக்கு தொலைத்​தொடர்பு நிறு​வனங்​கள் ஒத்​துழைப்பு அளிக்க வேண்​டும். பஞ்​சாப், தமிழ்​நாடு, உத்​த​ராகண்ட், ஹரி​யாணா போன்ற மாநிலங்​கள் சிபிஐ விசா​ரணைக்கு இசைவளிக்க வேண்​டும். அந்​தந்த மாநிலங்​களில் சைபர் குற்​றப் பிரிவு முழு​மை​யாக இயங்​கு​வ​தில் உள்ள சிக்​கல்​களை அறிக்​கை​யாக நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்ய வேண்​டும். அடுத்த விசா​ரணைக்​குள் சம்​பந்​தப்​பட்ட அனைத்து துறை அதி​காரி​களு​டன் கலந்து ஆலோ​சிக்க வேண்​டும். மேலும், தொலைத்​தொடர்பு அமைச்​சகத்​தின் சார்​பில் ஆஜராக வேண்​டும்.

டிஜிட்​டல் கைது முறை​கேடு​களில் பாதிக்​கப்​பட்​ட​வர்​களிடம் இருந்து ரூ.3 ஆயிரம் கோடி மோசடி செய்​யப்​பட்​டிருப்​பது அதிர்ச்சி அளிக்​கிறது. இந்த விவ​காரத்தை இரும்​புக்​கரம் கொண்டு அடக்க வேண்​டும். கடுமை​யான உத்​தர​வு​கள் பிறப்​பிக்​கா​விட்​டால் டிஜிட்​டல் கைது முறை​கேடு​கள் பூதாகர​மாகும். இவ்​வாறு அந்த உத்​தர​வில்​ கூறி​யுள்​ளனர்​.

SCROLL FOR NEXT