இந்தியா

ஐ-பேக் அலுவலக சோதனையில் தலையீடு: மம்தா பானர்ஜிக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இன்று தேர்​தல் நடை​பெறவுள்ள மேற்கு வங்க மாநிலத்​தில் நில​வும் சமூக- அரசி​யல் சூழலை அசா​தா​ரண​மான ஒரு சூழ்​நிலை என்று உச்ச நீதி​மன்​றம் கருத்து தெரிவித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஐ-பேக் அலுவலகத்தில் அமலாக்கத் துறை கடந்த ஜனவரியில் சோதனை நடத்தியது. அப்போது திடீரென வந்த முதல்​வர் மம்தா அந்த வளாகத்​திற்​குள் நுழைந்து, ஐ-பேக் தொடர்​பான கோப்​பு​களை கைப்​பற்றி சென்றார். இது தொடர்​பான வழக்கு நீதிப​தி​கள் பி.கே. மிஸ்ரா மற்றும் என்​.​வி. அஞ்​சா​ரியா அடங்​கிய அமர்வு முன்​பாக நேற்று விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது நீதிப​தி​கள் கூறிய​தாவது: "இது மாநிலத்​திற்​கும் மத்​திய அரசுக்​கும் இடையி​லான சாதாரண மோதல் அல்ல. ஒரு புல​னாய்வு அமைப்பு விசா​ரணை நடத்​திக் கொண்​டிருக்​கும் இடத்திற்கு, பதவி​யில் இருக்​கும் ஒரு முதல்​வர் நேரில் செல்​வார் என்று நாங்​கள் ஒரு​போதும் நினைத்​துப் பார்த்​த​தில்​லை.

எந்​தவொரு மாநில முதல்​வரும் விசா​ரணை​யின் நடுவே இதுபோன்று உள்ளே நுழைந்து ஜனநாயகத்​தைப் பேராபத்​தில் ஆழ்த்​தி​விட்​டு, இதை மத்​தி​ய-​ மாநில அரசு இடையி​லான மோதலாக சித்​தரிப்​பதை ஏற்க முடி​யாது. இது, ஒரு முதல்​வர் என்ற அதி​காரத்​தில் இருப்​பவர் தனிப்​பட்ட முறை​யில் மேற்​கொண்ட அத்​து​மீறல் நடவடிக்​கை​. இதன் மூலம் ஒட்​டுமொத்த ஜனநாயகமே ஆபத்​துக்​கு உள்​ளாகி​யுள்​ளது. மாநிலத்​தில் நில​வும் நடை​முறை யதார்த்​தங்​களை நீதி​மன்​றம் கவனிக்​காமல் புறந்தள்ள முடி​யாது.

இது ஒரு விதி​விலக்​கான சூழல். ஏற்​கெனவே ஒரு வழக்​கில் (எஸ்​ஐஆர் வழக்​கு) நீதி​மன்ற அதி​காரி​கள் பிணைக் கைதி​களாக வைக்​கப்​பட்​டிருந்​ததை நாங்​கள் கண்​டோம். யதார்த்​தத்தை எங்களால் மூடி மறைக்க முடி​யாது. நீங்​கள் சட்ட ரீதி​யாக நுணுக்கமான வாதங்​களை முன்​வைக்​கலாம். ஆனால் மாநிலத்தில் நடக்​கும் நடை​முறைச் சிக்​கல்​களை நாங்​கள் கவனிக்​காமல் கண்ணை மூடிக்​கொண்​டு சும்மா இருக்​க முடியாது. இவ்​வாறு நீதிப​திகள்​ கூறினர்​.

SCROLL FOR NEXT