புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், அண்டை நாடான பூடானுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். தலைநகர் திம்புவில் பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கியேல் வாங்சுக்கை அவர் நேற்று சந்தித்தார்.
இது குறித்து உச்ச நீதிமன்றம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ”இந்த சந்திப்பில் இந்தியா - பூடான் இடையிலான உறவை முன்னெடுத்துச் செல்ல இருவரும் உறுதிப் பாட்டை வெளிப்படுத்தினர். பூடானில் நீதித்துறையை டிஜிட்டல் மயமாக்குவதில் தொழில் நுட்ப உதவி மற்றும் ஆதரவை வழங்குவதாக தலைமை நீதிபதி உறுதி அளித்தார். இரு நாடுகள் இடையிலான கலாச்சார, ஆன்மீக மற்றும் அறிவுசார் பிணைப்பை அவர்கள் உரையாடல் மீண்டும் உறுதிப்படுத்தியது” என்று கூறப்பட்டுள்ளது.