இந்தியா

தெலங்கானாவில் பிணவறையில் சடலத்தை தின்ற தெரு நாய்கள்

செய்திப்பிரிவு

மகபூப் நகர்: தெலங்கானா மாநிலம் மகபூப்​ நகர் மாவட்​டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒரு​வர் சாலை விபத்​தில் இறந்​துள்​ளார். அவரது உடலை பிரேதப் பரிசோதனை செய்ய ஜட்​செர்லா அரசு மருத்​து​வ​மனை​யின் பிணவறை​யில் கொண்டு சென்று வைக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில், காலை​யில் சென்று பார்த்தபோது, அந்த இளைஞரின் உடலை தெரு​ நாய்​கள் கடித்து குதறி இருந்ததை அறிந்த மருத்​து​வர்​கள், உறவினர்​கள் அதிர்ச்சி அடைந்​தனர். இதையடுத்து அந்த இளைஞரின் உறவினர்​கள் உடலை வாங்க மறுத்து ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர். இதுகுறித்து தெலங்​கானா அரசு விசா​ரணை நடத்த உத்​தர​விட்​டது. இது தொடர்பாக 4 பேர் சஸ்​பெண்ட்​ செய்​யப்​பட்​டனர்​.

          
SCROLL FOR NEXT