புதுடெல்லி: மத்திய அரசின் பணியாளர்களுக்கு எதிரான ஊழல் வழக்கை மாநில காவல் துறை விசாரிக்க முடியும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான் மாநில ஊழல் தடுப்பு பிரிவு பதிவு செய்த வழக்கை எதிர்த்த மத்திய அரசின் ஊழியர் நாவல் கிஷோர் மீனா தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
இந்த விவகாரத்தில் ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்ததுடன். மத்திய அரசின் ஊழியர் நாவல் கிஷோர் மீனாவுக்கு எதிரான ஊழல் வழக்கை ரத்து செய்யவும் உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.