இந்தியா

45 நாட்களுக்கு ஒரு விமான நிலையம்: அமைச்சர் தகவல்

செய்திப்பிரிவு

விசாகப்பட்டினம்: விசாகப்​பட்​டினத்​தில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்​சி​யில் மத்​திய விமானத் துறை அமைச்​சர் ராம்​மோகன் நாயுடு பேசி​ய​தாவது:

உலகிலேயே மிக​வும் பாது​காப்​பான நாடாக இந்​தியா விளங்​கு​கிறது. நமது நாட்​டின் கலாச்​சா​ரத்​தை​ உலக நாடு​கள் ஆச்​சரி​யத்​தோடு பார்க்​கின்​றன. சராசரி​யாக ஒவ்​வொரு 45 நாட்​களுக்​கும் ஒரு விமான நிலை​யம் திறந்து வைக்​கப்​படு​கிறது.

உடான் திட்​டம் மூலம் சாமானியர்​களும் விமானப் பயணம் செய்ய ஏற்​ற​வாறு கட்​ட​ணங்​கள் குறைக்​கப்​பட்​டன. என்​டிஏ ஆட்​சி​யில் நம் நாட்​டில் விமான நிலை​யங்​களின் எண்​ணிக்கை 167 ஆக உயர்ந்​துள்​ளது. இவ்​வாறு அவர் பேசி​னார்​.

          
SCROLL FOR NEXT