இந்தியா

ஆந்திரா, தெலங்கானாவில் ஸ்ரீராம நவமி கோலாகலம்

செய்திப்பிரிவு

அமராவதி: ஸ்ரீராம நவமி விழாவை யொட்டி நேற்று திரு​மலை​யில் உள்ள ஏழு​மலை​யான் கோயி​லில் சீதா தேவி, லட்​சுமணர், அனு​மன் சமேத ஸ்ரீ​ராமருக்கு சிறப்பு திரு​மஞ்சன நிகழ்ச்​சிகள் நடந்​தன.

கடப்பா மாவட்​டத்​தில் திரு​மலை திருப்​பதி தேவஸ்​தான பராமரிப்​பில் உள்ள ஸ்ரீ ஒண்​டிமிட்டா கோதண்​ட​ராமர் திருக்​கோயி​லில் நேற்று ​ராம நவமி பிரம்​மோற்​சவம் கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது. உற்சவ மூர்த்​தி​கள் சிறப்பு திரு​மஞ்சன சேவைக்கு பிறகு மேள தாளங்​கள் முழங்க பிரம்​மோற்சவ கொடியேற்​றம் மிகச் சிறப்​பாக நடை​பெற்​றது. வரும் ஏப்​ரல் 1-ம் தேதி இக்​கோயி​லில் ஸ்ரீ​ராமர் திருக்​கல்​யாண நிகழ்ச்சி மிக பிரம்​மாண்​ட​மாக நடத்​தப்பட உள்​ளது. இதில் ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு கலந்து கொண்டு மாநில அரசு சார்​பில் சுவாமிக்கு பட்டு வஸ்​திரம், சீர்​வரிசைகள் வழங்க உள்​ளார்.

          

பத்​ராசலம் கோயி​லில்.. தெலங்​கா​னா​வில் உள்ள ​ஸ்ரீராமர் கோயில்​கள் அனைத்​தி​லும் ராம நவமி விழா நேற்று விமரிசை​யாக கொண்​டாடப்​பட்​டது. இதில் பத்​ராசலம் கோதண்​ட​ராமர் திருக்​கோயி​லில் நேற்று சுவாமிக்கு திருக்​கல்​யாண உற்​சவம் நடை​பெற்​றது. இதில் தெலங்​கானா முதல்​வர் ரேவந்த் ரெட்டி தம்​பதி சமேத​ராக கலந்​து​கொண்டு சுவாமிக்​கு பட்​டு வஸ்​திரங்​களை காணிக்​கை​யாக வழங்​கி​னார்​.

SCROLL FOR NEXT