இந்தியா

இந்தியாவின் முன்னோடியாக உருவெடுத்த வாராணசி தொகுதி: வாராணசி மண்டல ஆணையர் ராஜலிங்கம் சிறப்பு பேட்டி

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: பிரதமர் நரேந்​திர மோடி​யின் எம்.பி. தொகுதி​யான வாராணசி இந்​தி​யாவின் முன்​னோடி​யாக வளர்ச்சி பெற்றுவிட்டதாக அதன் மண்​டல ஆணை​யர் எஸ்.ராஜலிங்கம் கூறியுள்​ளார்.

தமிழகத்​தின் தென்​காசி​யைச் சேர்ந்த தமிழரான எஸ்.ராஜலிங்கம், உத்​தர பிரதேச மாநிலம் வாராணசி மாவட்ட ஆட்​சி​யராகவும், பணி உயர்​வுக்கு பின் மண்​டல ஆணை​யராகவும் அதே நகரில் சுமார் 4 ஆண்​டுகளாகப் பணி​யாற்​றினார். தற்​போது அவர் கான்​பூர் மண்​டல ஆணை​யராக இட​மாற்​றம் செய்யப்பட்டுள்​ளார். புதிய பொறுப்பை ஏற்​கும் முன்​பாக பிரதமர் நரேந்​திர மோடி​யின் வாராணசி தொகுதி குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்​டி​யில் கூறிய​தாவது:

பிரதமர் நரேந்​திர மோடி தொடர்ந்து 3-வது முறை எம்.பி.யாக இருப்​ப​தால் வாராணசி​யில் ஏற்​பட்​டுள்ள முக்​கிய வளர்ச்சி என்ன?

வாராணசி​யின் சாலை, ரயில் மற்​றும் கங்கை நதி ஆகிய​வற்​றின் போக்​கு​வரத்து முழு வளர்ச்சி பெற்​றுள்​ளன. இத​னால் டெல்​லி​யின் என்​சிஆர் போல் மேம்​படுத்த விசாகப்​பட்​டினம், சூரத், மும்​பையின் ஒரு பகுதி மற்​றும் வாராணசி ஆகிய 4 நகரங்​கள் தேர்​வாகி உள்​ளன. வாராணசி என்​சிஆர் பகுதிக்கு ‘காசி விந்​தி​யப் பிராந்​தி​யம்’ என்ற சிறப்பு அந்​தஸ்து அளிக்​கப்​பட்​டுள்​ளது. இதில், வாராணசி மற்​றும் அதன் அரு​கிலுள்ள மிர்​சாபூர் மண்​டலங்​களின் 7 மாவட்​டங்​கள் அடங்கி உள்​ளன. வாராணசி வளர்ச்​சியை அடிப்​படை​யாக வைத்து இப்​பிராந்​தி​யத்தை பொருளாதார ரீதி​யாக தரம் உயர்த்த திட்​ட​மிடப்​படு​கிறது.

பிரதம​ராக இருப்​ப​தால், வாராணசி தொகுதிவாசிகள் தங்​கள் எம்.பி.யை நினைத்​த​போது தொடர்​பு​கொள்ள முடி​கிறதா?

தொகுதிவாசிகளுக்​காக குருதாம் பகுதி​யில் பிரதமர் அலு​வல​கக் கிளை செயல்​படு​கிறது. இங்கு மக்​களின் குறைகளைத் தீர்க்க அன்​றாடம் ஒரு அமைச்​சர் அல்​லது எம்​எல்ஏ வந்து அமர்ந்து கேட்​கிறார்​கள். இதற்கு முன்​பாக மாவட்ட நிர்​வாகத்​திடமும் ஆலோ​சிக்​கப்​படு​கிறது. இத​னால், சுமார் 90% மனுக்​களுக்கு இங்​கேயே தீர்வு கிடைத்து விடு​கிறது. இதர மனுக்​கள் பிரதமரின் பார்​வைக்கு அனுப்பி வைக்​கப்​படு​கிறது. இவற்​றில் தங்​கள் எம்.பி.யை நேரில் சந்​திக்க விரும்பி கோருபவர்​களும் உண்டு. அதற்​கான முக்​கியத்​து​வம் ஆராய்ந்து பிரதமர் வாராணசி வரும் நாட்​களில் ஏற்​பாடு செய்​யப்​படு​கிறது.

வாராணசி​யின் கங்கை நதி​யில் பிணங்​களும் வீசப்​படும் என்ற பொது​வான கருத்து மாறி உள்​ளதா? இதற்கு பிரதமர் எடுத்த நட​வடிக்​கைகள் என்ன?

கங்​கை​யில் இப்​போது பிணங்​களை யாரும் வீசுவதில்லை. இதன் மீது தடை விதித்து அது தீவிர​மாகக் கண்​காணிக்​கப்​படுவ​தால் அந்த கருத்து முற்​றி​லும் மாறி விட்​டது. காவல் துறை மற்​றும் மாவட்ட நிர்​வாகத்​துடன் ‘நேஷனல் மிஷன் பார் கங்கா’ திட்​டம் சார்​பில் புதிதாக உரு​வாக்​கப்​பட்ட கங்கை கமிட்டி பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டுள்​ளது.

கங்கை மீதான எந்த ஒரு பிரச்​சினையும் இந்த கமிட்டி முன்​வைக்​கப்​பட்டு தீர்வு காணப்​படு​கிறது. பிணங்​கள் மட்​டும் அன்றி தொழிற்​சாலைகளின் கழிவு உள்​ளிட்ட எந்​த​வித​மான மாசுகளும் கங்​கை​யில் கலக்​காமல் கவனமாகக் கண்​காணிக்​கப்​படு​கிறது. கங்​கைக் கரையிலுள்ள மணிகன்கா காட், ஹரிச்​சந்​திரா காட் ஆகிய மயானங்​கள் சுமார் ரூ.50 கோடி​யில் மறுசீரமைப்பு செய்யப்​படு​கின்​றன.

வாராணசி​யில் அமலாக்​கப்​பட்டு வரும் கூடுதல் திட்​டங்​கள் பற்றி கூற முடியுமா?

இங்​குள்ள சர்​வ​தேச விமான நிலை​யம் ரூ.2,308 கோடி​யில் விரிவாக்​கம் செய்​யப்​படு​கிறது. இதில் நாட்​டில் எங்​கும் இல்​லாத வகை​யில், விமான ஓடுதளப் பாதைக்கு கீழே வாக​னங்​கள் சென்று​வர சுரங்​கம் அமைக்​கப்​படு​கிறது. நகரைச் சுற்றியுள்ள ரிங் ரோடு பணி இறுதி​கட்​டத்தை எட்​டியுள்​ளது. நகரின் மின்சாரவயர்கள் அனைத்​தும் ரூ.1,657 கோடி​யில் பூமிக்கு அடி​யில் அமைக்கப்​படு​கின்​றன.

கிரிக்​கெட் மைதான அரங்கு, காஞ்சி பட்​டைப் போல் புகழ்​பெற்ற பனாரஸ் பட்டு வளர்ச்​சிக்​காக ஒரு சிறப்பு தொழில் பூங்கா அமைக்​கப்​படு​கிறது. நாட்​டில் எங்​கும் இல்​லாத வகை​யில் ஒரு பிரம்​மாண்​ட​மான ‘யுனிட்டி மால்’ வணிக வளாகம் ரூ.154 கோடியில் அமை​கிறது. இதில், அனைத்து மாநிலங்​களுக்​கும் தலா ஒரு கடை, உ.பி.யின் 75 மாவட்​டங்​களுக்​கும் தலா ஒரு கடை ஒதுக்கப்​பட உள்​ளது. ரூ.315 கோடி​யில் ஒரு சூப்​பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை கட்​டப்​படு​கிறது. ரூ.400 கோடி​யில் விளை​யாட்டு அரங்கு மற்​றும் மாவட்​டத்​துக்​காக ரூ.20 கோடி​யில் ஒரு நூல​கமும் அமை​கிறது.

கிராமங்​களை எம்.பி.க்​கள் தத்​தெடுக்​கும் முறை​யால் பிரதமரின் முயற்​சிக்கு கிடைத்த பலன் என்ன?

கோவிட் தவிர மற்ற ஆண்​டுகளில் வருடம் தலா 5 கிராமங்​களை பிரதமர் தத்​தெடுத்​தார். அங்கு குடிநீர், சாலை போக்​கு​வரத்து, சோலார் மின்​சா​ரம், சுகாதா​ரம், கல்​விக்​கூடங்​கள், கைத்​தொழில் பயிற்சி உள்​ளிட்ட அடிப்​படை வசதி​கள் அனைத்​தும் செய்து தரப்​பட்​டுள்​ளன. இதற்​காக, எம்.பி. தொகுதி வளர்ச்சி நிதி​யும், பெருநிறு​வன சமூகப் பொறுப்பு நிதி​யும் பயன்​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன. இதுபோல் பல விஷயங்​களில் வாராணசி ஒரு எம்.பி.யின் தொகுதி​யாக நாட்​டுக்கு முன்​னோடி​யாக உள்​ளது.

வாராணசி​யின் சாலைகள் விரிவாக்​கத்​தில் வழி​யி​லிருந்த கோயில்​கள், மசூதி​களின் நிலை என்ன? மிகவும் உணர்​திறனான இப்​பிரச்​சினை உங்​கள் நிர்​வாகத்​தினால் சமாளிக்கப்பட்​டது எப்படி?

சுமார் 150 கோயில்​கள் தடை​யாக இருந்​தன. இதன் நிர்​வாகி​களிடம் பேச்சு​வார்த்தை நடத்​தினோம். இதன் பலனாக, இவற்​றில் பல​வற்றை இட​மாற்​றம் செய்​துள்​ளோம். ஒருசில கோயில்​களை ஒரே வளாகத்​தில் அமைத்​துக் கொடுத்​துள்​ளோம். தடை​யாக இருந்த சுமார் 7 மசூதி​கள் இடம்​பெயரத் தங்​கள் மறை​யின்​படி முஸ்​லிம்​கள் ஒப்​புக்​கொள்​ளவில்லை.

எனினும், அதன் நிர்​வாகி​கள் தாங்​களாகவே சில மசூதி​களின் ஒருபகுதியை இடித்து ஒதுக்கி தந்​தனர். இந்த இழப்​புக்கு ஈடாக வேறு திசையில் அவர்​களுக்கு இடமளிக்​கப்​பட்​டது. இதன்​மூலம், மசூதி​களின் நிலஅளவு குறை​யாமலும், இடம்​பெயராமலும் சமாளிக்​கப்​பட்டு விட்​டன. மேலும் ஒரிரு மசூதி​களின் இடத்​துக்கு ஈடாக அவர்​களுக்கு அரசு இழப்​பீடு அளித்து விட்​டது.

பிரதமர் யோசனையால் நடத்​தப்​படும் காசி தமிழ் சங்​கங்​களால் இது​வரை கிடைத்த பலன் என்ன?

வாராணசி​யில் தமிழ்​நாடு உள்​ளிட்ட பல்​வேறு மாநில​வாசிகள் இடம்​பெயர்ந்து வசிக்​கின்​றனர். இந்த சங்​கமங்​களால் அவர்களிடையே தமிழர்​கள் மற்​றும் தமிழ் மொழி மீதான வரலாறு, கலாச்​சா​ரம் உள்​ளிட்​ட​வற்​றைப் பற்​றிய ஒரு புரிதலும், விழிப்​புணர்​வும் ஏற்​பட்​டுள்​ளது. சங்​கங்​மகளுக்கு முன்​பாக நிலவி வந்த வடக்கு, தெற்கு என்ற பாகுபாடு குறைந்​துள்​ளது. மொத்தத்தில் தமிழர்​களுக்கு ஒரு தேசிய அடை​யாளம் இந்த சங்கமங்​களால் கிடைத்து வரு​கிறது.

தமி​ழின் பெரு​மையை அறிய வேண்டி, திருக்​குறள் போன்ற தமிழ் இலக்​கியங்​களின் மொழிபெயர்ப்பு நூல்​கள் படிப்​பது அதிகரித்துள்​ளது. கலாச்​சா​ரத் தொடர்​பு​களை வலுப்​படுத்​தும் இந்த சங்​கமங்​களுக்கு தரப்​படும் யோசனைகளை பிரதமர் ஏற்​கத் தயாராக உள்​ளார். இதுபோல் வந்த ஒரு யோசனையால்​தான், கடந்த சங்​கமத்​தின்​போது உ.பி.வாசிகளை ராமேஸ்வரம் அழைத்துச் சென்று நிறைவுவிழா நடத்​தப்​பட்​டது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT