இந்தியா

வந்தே மாதரம் பாடலை பாட சோனியா ஆட்சேபம் தெரிவித்தாரா? - பாஜக குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் மறுப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: சுதந்​திர தின விழா​வின்​போது வந்தே மாதரம் பாடலை முழு​மை​யாக பாடு​வதற்கு காங்​கிரஸ் மூத்த தலை​வர் சோனியா காந்தி ஆட்​சேபம் தெரி​வித்​த​தாக பாஜக குற்​றம் சாட்டியுள்​ளது. ஆனால் இதற்கு காங்​கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.

நாட்​டின் 80-வது சுதந்​திர தினம் காங்​கிரஸ் தலை​மையக​மான இந்​திரா பவனில் நேற்று நடை​பெற்​றது. கட்​சித் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே தலை​மை​யில் நடை​பெற்ற இவ்​விழா​வில், மூத்த தலை​வர்​கள் சோனியா காந்​தி, ராகுல் காந்தி உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர்.

தேசி​யக் கொடி ஏற்​றப்​படு​வதற்கு முன்​பாக வந்தே மாதரம் பாடல் பாடப்​பட்​டது. அப்​போது பாடலின் இடையே குறுக்​கிட்டு சோனியா காந்தி ஏதோ சைகை செய்​தார். இருந்​த​போதும், வந்தே மாதரம் பாடல் முழு​மை​யாக பாடி முடிக்​கப்​பட்​டது. இதைத் தொடர்ந்து கார்​கே, தேசி​யக் கொடியை ஏற்றி சிறப்​புரை​யாற்​றி​னார்.

இந்​நிலை​யில், வந்தே மாதரம் பாடலை காங்​கிரஸ் மூத்த தலை​வர் சோனியா காந்தி அவம​தித்​து​விட்​ட​தாக பாஜக குற்​றம் சாட்​டி​யுள்​ளது. இதுகுறித்து பாஜக​வின் செய்​தித் தொடர்​பாளர் கோபால் கிருஷ்ணா அகர்​வால் கூறும்​போது, “சுதந்​திர தின​மான இன்று வெளிச்​சத்​துக்கு வந்​துள்ள காட்சி மிக​வும் அவமானகர​மாக உள்​ளது.

இந்​தி​யா​வின் தேசி​யப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடப்​படும்​போது சோனியா காந்தி எதிர்ப்பு தெரி​வித்​ததும், அது ஏன் இசைக்​கப்​படு​கிறது என்று காங்​கிரஸ் தொண்​டர்​களிடம் கேள்வி எழுப்​பியதும் காங்​கிரஸ் கட்​சி​யின் மனநிலையை வெளிப்​படுத்​துகிறது, ‘வந்தே மாதரம்’ என்​பது வெறும் பாடல் மட்​டுமல்ல, அது இந்​தி​யா​வின் சுதந்​திரப் போராட்​டம், தேசிய உணர்வு மற்​றும் தேசபக்​தி​யின் வரலாற்​றுச் சின்​னம். நாட்​டின் சுதந்​திரப் போராட்​டத்​தின் பாரம்​பரி​யத்​துக்கு உரிமை கோரும் அதே காங்​கிரஸ் கட்​சி​தானா இது?” என்று கேள்வி எழுப்​பி​யுள்​ளார்.

இது தொடர்​பாக கட்​சி​யின் மூத்த தலை​வர் ஜெய​ராம் ரமேஷ் கூறும்​போது, “விழா​வின்​போது காங்​கிரஸ் தலை​வர் கார்கே நீண்ட நேரம் நின்​று​கொண்​டிருந்​த​தால், அவருக்கு ஒரு நாற்​காலியை வழங்​கு​மாறு சோனியா காந்தி கேட்​டுக் கொண்​டிருந்​தார்.

1937-ம் ஆண்டு அக்​டோபர் 28-ம் தேதி கல்​கத்​தா​வில் மகாத்மா காந்​தி, நேதாஜி சுபாஷ் சந்​திர போஸ், சர்​தார் வல்​லப​பாய் படேல், மவுலானா அபுல் கலாம் ஆசாத், ஜவஹர்​லால் நேரு, கோவிந்த் வல்​லப் பந்த், சி.ராஜகோ​பாலாச்​சாரி ஆகியோர் முன்​னிலை​யில் காங்​கிரஸ் செயற்​குழுக் கூட்​டம் நடை​பெற்​றது. அப்​போது குருதேவ் ரவீந்​திர​நாத் தாகூரின் ஆலோ​சனை​யின் பேரில், காங்​கிரஸ் கூட்​டங்​களில் ‘வந்தே மாதரம்’ பாடலின் ஆரம்​பப் பகு​தி​கள் மட்​டும் பாடப்பட வேண்​டும் என்று அவர்​கள் முடிவு செய்​தனர்.

‘வந்தே மாதரம்’ பாடலின் முதல் சில பத்​தி​களை மட்​டுமே பயன்​படுத்த வேண்​டும் என்று நேரு மற்​றும் போஸ் ஆகியோ​ருக்கு தாகூர் ஆலோ​சனை வழங்​கி​னார். அப்​போ​திருந்து ஒவ்​வொரு கூட்​டத்​தி​லும் அந்த வரி​களை நாங்​கள் பாடி வரு​கிறோம்; எங்​கள் சேவா தளம் மற்​றும் தொண்​டர்​கள் அதைப் பாடு​கின்​றனர். இதில் எந்த சர்ச்​சை​யும் இல்​லை. வந்​தே மாதரம்​ பாடலை காங்​கிரஸ்​ மூத்​த தலை​வர்​ சோனி​யா காந்​தி அவம​திக்​க​வில்​லை" என்​றார்​.

SCROLL FOR NEXT