இந்தியா

டெல்லியில் காற்று மாசை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: சோனியா வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்​லி​யில் காற்று மாசு​பாட்டை கட்​டுப்​படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று காங்​கிரஸ் மூத்த தலை​வர் சோனியா காந்தி வலி​யுறுத்​தி​னார்.

டெல்லி காற்று மாசு​பாடு பிரச்​சினை தொடர்​பாக நாடாளு​மன்ற வளாகத்​தில் பல்​வேறு எதிர்க்​கட்​சிகளின் தலை​வர்​கள் நேற்று போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். பிரதமர் வெறும் அறிக்கை வெளி​யிடு​வதை தவிர்க்க வேண்​டும், இந்த விவ​காரத்​தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும் என அவர்​கள் வலி​யுறுத்​தினர். பிரச்​சினை​யின் தீவிரத்தை எடுத்​துக்​காட்​டும் வகை​யில் சில எம்​.பி.க்​கள் முகக்​கவசம் அணிந்​திருந்​தனர்.

போராட்​டத்தை தொடர்ந்​து, காங்​கிரஸ் நாடாளு​மன்ற கட்​சி​யின் தலை​வர் சோனியா காந்தி கூறுகை​யில், “டெல்​லி​யில் காற்று மாசு​பாடு மிக மோசம் அடைந்​துள்​ளது. அதை கட்​டுப்​படுத்த உரிய நடவடிக்கை எடுப்​பது அரசின் பொறுப்​பாகும். இந்​தப் பிரச்​சினை​யால் குழந்​தைகளும் முதி​ய​வர்​களும் மிக​வும் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர்” என்​றார்.

காங்​கிரஸ் பொதுச் செய​லா​ளர் பிரி​யங்கா காந்தி வதேரா கூறுகை​யில், “காற்று மாசு​பாடு அரசி​யல் விவ​காரம் அல்ல. அரசு உறு​தி​யான நடவடிக்கை எடுக்க வேண்​டும். அதற்கு நாங்​கள் உறு​துணை​யாக இருப்​போம்” என்​றார். காங்​கிரஸ் தேசிய தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே உள்​ளிட்ட பலர் போ​ராட்​டத்​தில்​ பங்​கேற்​றனர்​.

SCROLL FOR NEXT