சோனியா காந்தி | கோப்புப் படம்

 
இந்தியா

பிரதமர் பதவிக்கு பதிலாக சூப்பர் பிரதமராக சோனியா காந்தி செயல்பட்டார்: பாஜக விமர்சனம்

வெற்றி மயிலோன்

புது டெல்லி: “2004 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றபோது, ​​சோனியா காந்தி பிரதமர் பதவியை ஏற்க மறுத்திருக்கலாம். ஆனால், அவர் சூப்பர் பிரதமராக செயல்பட்டார்” என்று பாஜக எம்.பியும், செய்தித் தொடர்பாளருமான சுதான்ஷு திரிவேதி விமர்சித்துள்ளார்.

காங்​கிரஸ் மூத்த தலை​வர் சோனியா காந்தி எழு​திய ‘பிளாங்​கிங்: ஏ ஜர்னி ஆஃப் லவ்’ என்ற சுயசரிதை புத்​தகம் வெளி​யாகி இருக்கிறது. ஏழு அத்தியாயங்கள், 544 பக்​கங்​களை கொண்ட இந்த புத்தகத்தில் தனது வாழ்​நாளின் முக்​கிய தருணங்​களை அவர் நினை​வு​கூர்ந்து உள்​ளார்.

அதில், ‘கடந்த 2004-ம் ஆண்டு மக்​கள​வைத் தேர்​தல் முடிவு​கள் வரு​வதற்கு முன்​பாகவே பிரதமர் பதவியை ஏற்​கக்கூ​டாது என்று முடிவு எடுத்து​விட்​டேன். இந்திரா, ராஜீவ் படு​கொலைகளால் எனது மகன் ராகுல், மகள் பிரி​யங்கா மிக மோச​மாக பாதிக்​கப்​பட்டு இருந்தனர். நான் பிரதம​ரா​னால் எனக்​கும் அதே நிலை ஏற்​படக்​கூடும் என்று கவலைப்​பட்​டனர்.

தேர்​தல் முடிவு​களுக்​குப் பிறகும் நான் பிரதம​ராக பதவி​யேற்க காங்​கிரஸ் மூத்த தலை​வர்​கள் வலியுறுத்தினர். ஆனால் நான் திட்​ட​வட்​ட​மாக மறுத்​து​விட்​டேன் என்று சோனியா காந்தி தனது சுயசரிதை நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சுதான்ஷு திரிவேதி, “2024 மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் மன்மோகன் சிங்கை பிரதமராக நியமித்துவிட்டு, சோனியா காந்தி அரசாங்கத்தின் அதிகாரக் கட்டமைப்பிலிருந்து விலகிவிடவில்லை. சோனியா காந்தி அமைச்சரவையில் இடம்பெறாத போதிலும், தேசிய ஆலோசனைக் குழுவின் தலைவராக இருந்ததன் மூலம் அவர் அரசாங்கத்தின் மீது பெரும் செல்வாக்கைக் கொண்டிருந்தார்.

தேசிய ஆலோசனைக் குழுவின் தலைவர் பதவிக்கு அமைச்சரவை அந்தஸ்து இருந்தது. பிரதமர் பதவியைத் துறந்தாலும், அமைச்சரவை அந்தஸ்து கொண்ட ஒரு பதவியில் சோனியா காந்தி தொடர்ந்து நீடித்தது வழக்கத்துக்கு மாறான ஒன்று. இதன்மூலமாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் அவர் சூப்பர் பிரதமராக செல்வாக்கு செலுத்தினார்” என்றார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT