புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து உடல்நலம் விசாரித்தார். அப்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (ஐமுகூ) ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட நூறு நாள் வேலைத் திட்டம், கல்வி உரிமை, தகவல் அறியும் உரிமைச் சட்டங்கள் குறித்து இருவரும் நினைவு கூர்ந்தனர்.
லாலுவின் மகனும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவருமான தேஜஸ்வி யாதவும் இந்தச் சந்திப்பின்போது உடனிருந்தார். இண்டியா கூட்டணி டெல்லி ராம்லீலா மைதானத்தில் பேரணி நடத்திய மறுநாள் இச்சந்திப்பு நடந்துள்ளதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது.