இந்தியா

சோனியா காந்தி வாழ்க்கை வரலாற்று புத்தகம் நவ.10-ல் வெளியீடு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: காங்​கிரஸ் மூத்த தலை​வர் சோனியா காந்தியின் வாழ்க்கை வரலாற்று நூலான ‘பிலாங்கிங்’ (Belonging) வரும் நவம்பர் 10-ம் தேதி ஹார்ப்​பர்​காலின்ஸ் பதிப்​பகத்​தால் வெளியிடப்​படு​கிறது. இதில் அவரது குழந்​தைப் பரு​வம், திருமணம், ராஜீவ் காந்தி படு​கொலை மற்​றும் அரசி​யல் பிர​வேசம் ஆகியவை இடம்​பெற்​றுள்​ளன.

முன்​ன​தாக, இந்​நூலை வெளி​யிட​விருந்த பென்​கு​யின் ரேண்​டம் ஹவுஸ் இந்​தியா பின்​வாங்​கியது சர்ச்​சையை ஏற்​படுத்​தி​யது. பிரதமர் மோடி, ஆர்​.எஸ்​.எஸ் மற்​றும் சீன ஆக்​கிரமிப்பு தொடர்பான பகு​தி​களை நீக்க அரசு அழுத்​தம் கொடுத்​த​தாகக் காங்​கிரஸ் மூத்த தலை​வர் அசோக் கெலாட் குற்​றம்​சாட்​டி​னார். “இது ஜனநாயக படு​கொலை” என்று அவர் விமர்​சித்​தார்.

இதை மறுத்த பாஜக தலை​வர் முக்​தார் அப்​பாஸ் நக்​வி, இது சுயசரிதையா அல்​லது புனைக்கதையா என்​ப​தைப் பதிப்​பகமே முடிவு செய்​யும் என்​றார். பதிப்​பகத் திருத்​தத்​தின் போது ஒரு குறிப்பிட்ட விவ​காரத்​தில் கருத்து வேறு​பாடு ஏற்​பட்​ட​தால், சோனியா காந்தி தரப்பே ஒப்​பந்​தத்​தைத் திரும்​பப் பெற்​ற​தாக பென்​கு​யின் நிறு​வனம் விளக்​கமளித்​துள்​ளது.

ஒப்​பந்த விதி​கள் மற்​றும் ஆசிரியரின் ரகசி​யத்​தைக் காக்​கும் கடமை இருப்​ப​தால், இந்த முரண்​பாட்​டுக்​கான காரணங்​களை வெளி​யிட முடி​யாது என பென்​கு​யின்​ நிறு​வனம்​ கூறிவிட்​டது.

SCROLL FOR NEXT