இந்தியா

சோனம் வாங்சுக் 60 நாட்கள் வீட்டுக் காவலில் சிறைவைப்பு

செய்திப்பிரிவு

ஸ்ரீநகர்: லடாக் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக், 60 நாட்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு உள்ளார். பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளில் பங்கேற்க அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு லே நகரில் நடந்த உயிரிழப்பு குறித்த நீதி விசாரணை ஆணைய அறிக்கை ஏன் தாமதமாகிறது, குளிர்காலத்தின் நடுவே அவசரமாக கண்துடைப்பு தேர்தல் ஏன் திணிக்கப்படுகிறது என்ற கேள்விகளை எழுப்பியதற்காகவே இது நடப்பதாக சோனம் வாங்சுக் குற்றம்சாட்டியுள்ளார். தம்முடைய எக்ஸ், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் பக்கங்களைச் சென்றடையும் பார்வையாளர்களின் எண்ணிக்கை கடுமையாக முடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT