இந்தியா

20 நாளில் சோனம் வாங்சுக் எடை 9.5 கிலோ குறைந்தது

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு பொறுப்​பேற்று மத்திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் பதவி விலக வேண்டும் என கரப்​பான் பூச்சி ஜனதா கட்​சி டெல்லி​யில் போராட்டம் நடத்தி வருகிறது.

இதில் இணைந்​துள்ள சமூக சேவகர் சோனம் வாங்சுக் டெல்லி ஜந்தர் மந்​தர் மைதானத்​தில் கடந்த 20 நாட்​களுக்கு மேலாக உண்ணா​விரதம் மேற்​கொண்டு வரு​கிறார். இவரது உடல் எடை இதுவரை மொத்​தம் 9.5 கிலோ குறைந்து தற்​போது 56.55 கிலோவாக உள்​ளது.

அவரது உடல்​நிலை சிக்​கலான நிலைக்கு செல்ல வாய்ப்​புள்ளதாக மருத்​து​வர்​கள் எச்​சரித்​துள்​ளனர். நாடாளு​மன்ற கூட்​டம் வரும் 20-ம் தேதி தொடங்​க​வுள்​ளது. அன்று கரப்​பான் பூச்சி ஜனதா கட்சி சார்​பில் நாடாளு​மன்​றம் நோக்கி அமைதி பேரணி நடத்த திட்டமிடப்​பட்​டுள்​ளது. தனது உண்​ணா​விரத போராட்​டத்தை தொடர்​வ​தில் சோனம் வாங்​சுக் உறு​தி​யாக உள்​ளார்.

SCROLL FOR NEXT